சென்னை : ""எம்.எல்.ஏ.,க்கள், தொகுதிகளில், விரைந்தும், பறந்தும் வேலை பார்க்க வேண்டி இருப்பதால், அவர்களுக்கு, தமிழக அரசு, கார்கள் வழங்க வேண்டும்,'' என, புதிய தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், அலுவலகம் தேவை. எம்.எல்.ஏ.,க் கள், விரைந்தும், பறந்தும் வேலை பார்க்க வேண்டி உள்ளது. எனவே, எம்.எல்.ஏ.,க்களுக்கு, கார்கள் வழங்க வேண்டும். தொகுதி நிதியை, 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.முனுசாமி - உள்ளாட்சித் துறை அமைச்சர்: கலெக்டர் அலுவலகங்களில், தனி அலுவலகம் தேவையில்லை. ஏற்கனவே, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அலுவலகங்கள் இருக்கின்றன. தொகுதி நிதியாக, தற்போது, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, 2 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.மார்ச், 2ம் தேதி, இலங்கையின் மீது மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தை, ஐ.நா., கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை, இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். அதற்கு, ஒரு தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.