சென்னை : ""டெல்டா மாவட்டங்களில் நிகழ்ந்த விவசாயிகள் மரணங்களுக்கு, வறட்சி தான் காரணம்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கராஜன் கூறினார். சட்டசபையில் அவர் பேசியதாவது: டெல்டா மாவட்ட விவசாயிகள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஹெக்டேருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வீதம், நிவாரணம் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில், 19 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். மரணம் குறித்து, பல வகையாக கூறப்பட்டாலும், வறட்சி தான் காரணம் என்பது மட்டும் உண்மை. பல விவசாயிகள், அதிர்ச்சியில் இறந்ததாகவும் கூறுகின்றனர். மரணங்கள் எப்படி நடந்தது என, ஆய்வு செய்து, அவர்களின் குடும்பங்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு ரங்கராஜன் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.