சென்னை : அண்ணா பல்கலை துணைவேந்தரின் ஓய்வு வயதை, 65லிருந்து, 70 ஆக உயர்த்தும், சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் @நற்று தாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்கான ஓய்வு பெறும் வயது, 65 ஆக இருந்தது. இதனை, 70 ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டு, சில பல்கலைக் கழகங்களில், ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது. இந்தவகையில், மத்திய பல்கலைக் கழகங்கள் சட்டத்திற்கு இணையாக, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரின் ஓய்வு பெறும் வயது, 65 லிருந்து, 70 வயதிற்கு உயர்த்தும் வகையில் சட்டம் திருத்தப்படுகிறது. இதுகுறித்த, சட்ட திருத்த மசோதாவை, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டசபையில் தாக்கல் செய்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.