பேச்சுவார்த்தை மூலம் நில பிரச்னைக்கு தீர்வு ஏன்?வீட்டு வசதி வாரியம் முடிவால் சர்ச்சை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை, காளப்பட்டி வீட்டுவசதி வாரிய திட்டத்தில், கூடுதல் இழப்பீடு கோரும், ஒரு குறிப்பிட்ட நில உரிமையாளர்களுடன், வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை மூலம், உடன்பாடு எட்டியதன் பின்னணி குறித்து, சர்ச்சை ஏற்பட்டுள்ளது.வீட்டு வசதி வாரிய திட்டங்களில், பல இடங்களில், நில உரிமையாளர்கள் அதிக விலை கோரும் விவகாரங்கள், நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான ஒதுக்கீட்டாளர்கள் விற்பனை பத்திரம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.கோவை மாவட்டம், காளபட்டி கிராமத்தில், 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீட்டுவசதி வாரியம் மூலம் குடியிருப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம், 400க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டதில், 90 சதவீத வீடுகளை வாங்கியவர்களுக்கு, இன்னும் விற்பனை பத்திரம் கிடைக்கவில்லை. இத்திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்டதில், 6.85 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர் ருத்ரசாமி மட்டும், இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்து விட்டார்.கூடுதல் இழப்பீடு கேட்டு, அவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இறுதி விலை நிர்ணயிக்க முடியாததால், ஒதுக்கீட்டாளர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க முடியவில்லை என, வீட்டுவசதி வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில், நில உரிமையாளரின் வாரிசுகள், ஒரு சென்ட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு கேட்டனர். ஆனால், வீட்டுவசதி வாரியம், இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்தது.இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வாரியத்தின் மேல்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
வாரியம் புதிய முடிவு இது குறித்து, வீட்டுவசதி வாரியத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவை காளப்பட்டி, இரண்டாவது செக்டார் திட்டத்தில், இறுதி விலை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்த விவகாரத்தில், நில உரிமையாளர்களின் வாரிசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுக்கான சட்ட ஆலோசனை பெறப்பட்டது. இதன்படி, 6.85 ஏக்கர் நிலத்துக்கு, 2.25 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க முடிவு செய்யப்பட்டு, வாரிய நிர்வாக குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான, நிர்வாக உத்தரவு வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஏன் இந்த நடவடிக்கை? இது குறித்து, வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் கூறியதாவது: நில உரிமையாளர் கூடுதல் இழப்பீடு கோரி தொடரும் வழக்குகளில், சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அது குறித்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்து, இறுதி கட்டம் வரை, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, வாரியத்தின் நிர்வாக விதி. இச்சூழலில், கோர்ட்டுக்கு வெளியில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்ப்பது, ஒதுக்கீட்டாளர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும். எனவே, இந்த விவகாரத்தில் மட்டும், வாரிய அதிகாரிகள் நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு எட்டியதன் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். அப்போது தான், பல்வேறு விவரங்கள் வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்