சென்னை
: பெட்ரோல் நிலையம், எரிவாயு நிரப்பும் நிலையம் அமைக்க, தடையில்லா
சான்றிதழ் வழங்க, தீயணைப்பு துறையினர் லஞ்சம் கேட்பதாக, ஊழல் தடுப்பு
மற்றும் கண்காணிப்பு துறைக்கு புகார்கள் வந்தன. தண்டையார் பேட்டையை சேர்ந்த
தனியார் நிறுவனத்தின் மேலாளர் ரவிக்குமார். இவர், அரும்பாக்கத்தில்,
வாகனங்களுக்கான எரிவாயு நிரப்பும் நிலையம் துவங்க, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு
துறை, உதவி கோட்ட அலுவலர், சுரேஷ் ஆனந்தை, அணுகி உள்ளார். அவர், 30 ஆயிரம்
ரூபாய் கொடுத்தால், தடையில்லா சான்றிதழ் வழங்குகிறேன் என
தெரிவித்துள்ளார். ரவிக்குமார், ஊழல் தடுப்பு கண்காணிப்பு அலுவலகத்தில்
புகார் செய்தார்.
நேற்று, கீழ்ப்பாக்கம் அலுவலகத்தில், சுரேஷ்
ஆனந்திடம், 30 ஆயிரம் ரூபாயை ரவிக்குமார் கொடுத்த போது, ஊழல் தடுப்பு
மற்றும் கண்காணிப்பு துறையினர், அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.