சென்னை : மார்ச்சில் நடக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வெழுத விரும்புபவர்கள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், 11ம் தேதி முதல், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி கட்டணம், 1,000 ரூபாயுடன் சேர்ந்து, "எச்பி' வகை நேரடி தேர்வர்கள், 187 ரூபாயும், ஒரு பாடத்தை மட்டும் எழுதும், "எச்' வகை தேர்வர்கள், 85 ரூபாயும் செலுத்த வேண்டும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பணசெலுத்துகை சீட்டு மட்டுமே, தேர்வு கட்டணம் செலுத்த பயன்படுத்த வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள தொகையை, 14ம் தேதிக்குள், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும், "அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை - 6' என்ற பெயரில் செலுத்த வேண்டும். இணையதளத்தில் பூர்த்தி செய்து புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் தனித்தேர்வர்கள், வரும், 22ம் தேதி மற்றும் 23ம் தேதி, அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பித்து, அனுமதி சீட்டை பெற்று கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில், தாங்கள் கடைசியாக படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். மேலும் விவரங்களை, www.tn.gov.in/dgeஎன்ற இணையதளத்தில் இருந்து பெறலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.