இஸ்லாமாபாத் : "காஷ்மீர் மக்களுக்கு தங்கள் ஆதரவு தொடரும்' என, பாகிஸ்தான் மீண்டும் தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும், காஷ்மீர் விவகாரத்தில் தான், விரோதம் நீடித்து வருகிறது."காஷ்மீர் மக்களிடம் சுதந்திரமான ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்' என, பாகிஸ்தான் அடிக்கடி வலியுறுத்தி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 5ம் தேதியை, காஷ்மீர் ஒற்றுமை நாளாக, பாகிஸ்தான் அனுசரித்து வருகிறது.இது தொடர்பாக பேசிய, பாகிஸ்தான் தலைவர்கள், "காஷ்மீர் விஷயத்தில் அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தங்கள் ஆதரவு தொடரும்' என, தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி குறிப்பிடுகையில், "காஷ்மீர் பிரச்னைக்கு, தீர்வு காண்பதில் பாகிஸ்தான் உறுதியாகஉள்ளது. இது தொடர்பாக இந்தியாவுடன் நம்பிக்கை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருகிறோம். ஐ.நா., வழிகாட்டுதலுடன் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.