கெய்ரோ : எகிப்து நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள, ஈரான் அதிபர் அகமதி நிஜாத் மீது, ஷூ வீசப்பட்டது. எகிப்தும்,
ஈரானும், 30 ஆண்டுகளுக்கு முன், நட்பு நாடுகளாக இருந்தன. ஈரானில் ஏற்பட்ட
இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு, எகிப்து அதிபராக இருந்த ஹோஸ்னி
முபாரக், அமெரிக்காவுடன் நெருங்கி பழகினார். இதனால், ஈரானுக்கும், எகிப்துக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.எகிப்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், புதிய அதிபர் முகமது முர்சியை சந்திக்க, ஈரான் அதிபர் அகமதி நிஜாத், மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். எகிப்தில் சன்னி முஸ்லிம்கள் அதிகம். ஈரானில், ஷியா முஸ்லிம்கள் அதிகம்.ஷியா முஸ்லிம் தலைவரான அகமதி நிஜாத் வருகையை, எகிப்தில் உள்ள சன்னி முஸ்லிம்கள் எதிர்த்தனர். அதுமட்டுமல்லாது, சிரியா கிளர்ச்சியாளர்கள் பலர், எகிப்தில் தான் உள்ளனர். சிரியா அதிபரை ஆதரிக்கும் நிஜாத்துக்கு, எகிப்து அரசு தரப்பில் மட்டுமே வரவேற்பு இருந்தது.கெய்ரோவில் உள்ள புகழ் பெற்ற மசூதிக்கு, நிஜாத் நேற்று சென்ற போது, சிரியா கிளர்ச்சி ஆதரவாளர் ஒருவர், தன் ஷூ வை, நிஜாத் மீது வீசினார். ஆனால், அவர் மீது படவில்லை. எகிப்து போலீசார், அந்த நபரை கைது செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.