திருநெல்வேலி:பாவூர்சத்திரம் அருகே மோட்டார்பைக்கில் கணவருடன் சென்ற புதுமணப்பெண் கார் மோதி இறந்தார்.
பாவூர்சத்திரம் அருகே நாகல்குளம் வேதக்கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் மனைவி பொன் சுதா(23). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. நேற்றுமுன்தினம் இருவரும் மோட்டார்பைக்கில் நாகல்குளத்தில் இருந்து பாவூர்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அருணாப்பேரி விலக்கு அருகே பைக் சென்ற போது கார் மோதியது. இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று பொன் சுதா இறந்தார்.
விபத்து குறித்து பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜமால் விசாரணை நடத்தினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.