சென்னை : கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம்' படப் பிரச்னை தொடர்பாக, வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படம், சர்ச்சைக்கு உள்ளானது. படம் வெளியாவதில், முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்தப் பிரச்னை தொடர்பாக, "தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா... சர்வாதிகார ஆட்சியா...' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை, ஒரு பத்திரிகையில் வெளிவந்தது.இதையடுத்து, விஜயகாந்த்க்கு எதிராக, தமிழக முதல்வர் சார்பில், சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.அதில், "விஜயகாந்தின் அறிக்கை, முதல்வரை அவதூறு செய்வதாக உள்ளது. முதல்வரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வேண்டுமென்றே, இவ்வாறு அறிக்கை வெளியிட் டுள்ளார். இதில், எந்த அடிப்படையும் இல்லை. எனவே, விஜயகாந்த் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கு: சிவகங்கையில், 2012 ஆக.,8 ல் தே.மு.தி.க., பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற விஜயகாந்த், முதல்வர் ஜெ.,வை அவதூறாக பேசியதாக, பிப்.,2ல் சிவகங்கை செஷன்ஸ் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி மாயாண்டி,நேற்று விசாரித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மார்ச் 6ல் கோர்ட்டில் ஆஜராக, உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.