பெரியகுளம் : மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நக்சல் விவேக், பெரியகுளம் சப்-கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே முருகமலையில், 2007 ஜூன் 26 ல், ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட நக்சல் தலைவன் சுந்தரமூர்த்தி, வேல்முருகன், பழனிவேல், முத்துசெல்வம், கார்த்திக், விவேக் (எ) ராஜா, காளிதாஸ், நவீன்பிரசாத், ஈஸ்வரன், பாலன் (எ) பாலகிருஷ்ணன், ரஞ்சித் உட்பட 11 பேர் மீது பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், காளிதாசை தவிர மற்றவர்கள் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் வனப்பகுதியில், போலீசுடன் நடந்த துப்பாக்கி சண்டையில், நவீன்பிரசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது தப்பிய காளிதாஸ், 6 ஆண்டுகளாகியும் தலைமறைவாக உள்ளார். வேல்முருகன், கார்த்தி, பழனிவேல், முத்துச்செல்வம், ஈஸ்வரன், பாலன் (எ) பாலகிருஷ்ணன் உட்பட 6 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதில் இரு மாதங்களுக்கு முன்பு, வேல்முருகன், கார்த்தி, பழனிவேல் ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களை பிடிக்க, கியூ பிரிவு போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். சுந்தரமூர்த்தி சென்னை புழல் சிறையிலும், ரஞ்சித், விவேக் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று விவேக்கை, கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் பெரியகுளம் சப்-கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சிங்கராஜ், பிப்.,15 ல் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.