சிவகங்கை
: சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையில்,
பயிற்சி முடித்த போலீசாருக்கு வழியனுப்பும் விழாவும், வீரர்களின் சிறப்பு
அணி வகுப்பு மரியாதையும் நடந்தது. இலுப்பக்குடியில், 2011ல் 150
ஏக்கரில், இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை பிரிவு துவக்கப்பட்டது. இதன்
கீழ் செயல்படும், தொழில்நுட்ப ரிவுக்கு 292 பேர், கடந்த 6 மாதங்களுக்கு
முன்பு தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் உட்பட 20 மாநிலங்களில் இருந்து
வீரர்கள் தேர்வாகினர். இவர்களுக்கு, இங்குள்ள பயிற்சி மையத்தில்
துப்பாக்கி சுடுதல், எல்லை பாதுகாப்பு, கயிறு ஏறுதல், கராத்தே, "மேப்
ரீடிங்', பேரிடர் மேலாண்மை போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆறு மாதம்
பயிற்சி பெற்ற போலீசாரை, எல்லை பாதுகாப்பு பிரிவுக்கு அனுப்பும்
விழா,நேற்று இலுப்பக்குடியில் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை
டி.ஐ.ஜி., ராஜேஷ் குமார் பட்டாரியா தலைமையில் நடந்தது. அவருக்கு, பயிற்சி
முடித்த போலீசாரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டன. அவர்
பேசுகையில், தென்னிந்தியாவிலேயே, சிவகங்கையில் தான் இந்த பயிற்சி மையம்
உள்ளன. பயிற்சி முடித்த போலீசார், தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தேச
நலனுக்காக, பாடுபட்டு அரும்பணியாற்றுவர், என்றார்.
கமாண்டன்ட்கள்
ஜோயி,ரமேஷ்வர்மா, உதவி கமிஷனர்கள் சோலைராஜ், நித்தில்குமார், மாவட்ட வன
அலுவலர் ராகேஷ் குமார் ஜெக்கானி, சொர்ணம் பங்கேற்றனர். பயிற்சி குறித்து
குடியாத்தம் பாண்டியன்,"" இம்மையத்தில் பயிற்சி முடித்து செல்லும் முதல்
குரூப் வீரர்கள் நாங்கள் தான். இந்தி தெரியாததால் பெரிதும் கஷ்டப்பட்டேன்.
எனவே, தமிழக பாடங்களில், இந்தியை ஒரு கட்டாய பாடமாக ஆக்கவேண்டும். எல்லை
பாதுகாப்பு படையில், தமிழக வீரர்கள் அதிகம் சேர வேண்டும், என்றார்.
ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரசிங்,"" வடமாநிலத்தை விட, இங்கு பயிற்சி பெற
நல்ல சீதோஷ்ன நிலை உள்ளது. எல்லையை பாதுகாக்கும் பணிக்கு செல்வதில்,
பெருமிதம் அடைகிறேன், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.