மதுரை :மதுரையில், தி.மு.க., செயற்குழு உறுப்பினர் "பொட்டு' சுரேஷ் கொலையில் சரணடைந்தவர்கள், சம்பவத்தின்போது எங்கே இருந்தனர்; யாரிடம் பேசினர் என, அவர்களது மொபைல் போன் எண்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஜன.,31ல், மதுரையில், "பொட்டு' சுரேஷ் மர்மநபர்களால் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், போலீசார் தங்களை தேடுவதாக கூறி, மதுரை கீரைத்துறை சபாரத்தினம் உட்பட 7 பேர், நத்தம் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை நேற்று முன் தினம் முதல் பிப்.,11 வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மதுரை கோர்ட் அனுமதி அளித்தது. உடனடியாக சுப்பிரமணியபுரம் ஸ்டேஷனிற்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு, அவர்களது மொபைல் போன் எண்கள் குறித்த விபரங்களை போலீசார் தயாராக வைத்திருந்தனர். சம்பவத்தின் போது, அவர்கள் யாரிடம் பேசினர்; எங்கிருந்தனர் என்பது குறித்து விசாரித்தனர். அதுகுறித்த விபரங்களை வெளியிட, போலீசார் மறுத்துவிட்டனர். இதற்கிடையே, சரணடைந்தவர்களில் ஒருவரான கீரைத்துறை சந்தானத்திற்கு ஏற்கனவே கையில் காயம் இருந்து, அதற்கு சிகிச்சை பெற்றிருந்தார். பிப்.,2ல், கோர்ட்டில் அவர் சரணடைந்தபோது, இதுகுறித்து மாஜிஸ்திரேட் கேட்டதற்கு, "கம்பி குத்தியால் காயம் ஏற்பட்டதாக' தெரிவித்தார். அவரை, நேற்று காலை மதுரை அரசு மருத்துவமனைக்கு, தொடர் சிகிச்சைக்காக போலீசார் அழைத்து வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், "அவரை உள்நோயாளியாக அனுமதித்தால் நல்லது' என்றனர். இதை ஏற்க மறுத்த போலீசார், அவரை மீண்டும் விசாரணைக்காக ஸ்டேஷனிற்கு அழைத்துச் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.