Advertisement
ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள் சாக்லெட், முறுக்கு தரும் சக்கந்தி பள்ளி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,06:30 IST

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டத்தில், ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் அரசு பள்ளியில், இரு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் சக்கந்தியில் 35 ஆண்டுகளாக, ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், முன்னாள் முதல்வர்களின் படங்களுடன், நான்கு பெரிய பீரோக்கள், வாட்டர் பில்டர், டி.வி.,- சர்வசிக்ஷா திட்டத்தில் ஆசிரியர்கள் வசதியாக அமர சேர்கள், மாணவர்களுக்கு பெஞ்ச் என அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், இப்பள்ளியில் தினேஷ், என்ற ஒரே ஒரு மாணவர் மட்டுமே தற்போது படிக்கின்றார். தலைமையாசிரியர் மட்டும் பாடம் நடத்தி வந்த இப்பள்ளியில், "ஒரே ஒரு மாணவரின் கல்வி நலன் கருதி' அரசு கடந்த மாதம் கூடுதலாக ஒரு பெண் ஆசிரியரை நியமித்துள்ளது. அந்த ஆசிரியையும் மாணவரை அருகில் அமர வைத்து, சிறப்பு பயிற்சி அளிக்கிறார். ஒரே மாணவரையும் "தக்க' வைத்துக் கொள்வதற்காக, இப்பள்ளியில், சத்துணவு மையமும், அதற்கு ஒரு அமைப்பாளரும் உள்ளனர். பள்ளிக்கு தவறாமல் மாணவர் தினேஷ் வரவேண்டும் என்பதற்காக, அவருக்கு தினமும், சாக்லெட், பிஸ்கட், முறுக்கு வாங்கி கொடுக்கின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த பல குழந்தைகளை, 10 கி.மீ., தொலைவில் தேவகோட்டை, முப்பையூரில் உள்ள பள்ளிகளில் "கட்டணம் செலுத்தி' படிக்க வைக்கின்றனர். அரசு பள்ளி தலைமையாசிரியர் தனீஸ்லாஸ் கூறுகையில், "" 2 முறை கிராம கூட்டம் நடத்தி பேசியிருக்கிறோம். தமிழ் வழியோடு, ஆங்கில வழியிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக பாடம் கற்றுத் தருவதாக உறுதியளித்து விட்டோம். வரும் ஆண்டிலாவது குழந்தைகளை சேர்ப்பார்கள், என நம்புகிறோம்'' என்றார். கல்வித்துறை அதிகாரிகள், இது போன்று தடுமாறும் பள்ளிகள் உள்ள கிராமத்திற்கு சென்று, சமச்சீர் கல்வி கற்பிக்கப்படுவதை புரியும்படியாக, கிராம மக்களிடம் விளக்கிக்கூறி, மாணவர்களை சேர்க்க, நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Ignatius Rajarethinam - Yishun,சிங்கப்பூர்
07-பிப்-201312:32:37 IST Report Abuse
Ignatius Rajarethinam அரசு ஊழியர்கள் அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கட்டும். அரசு சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகலை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் அவர்களுடைய தரம் ..அவர்களுக்கு தேவை அரசு சம்பளம் மட்டுமே. எத்தனை சதவீதம் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை அவர்களை கேட்டால் நன்கு தெரியும். அரசாங்க பள்ளிகள் என்பது கேவலமாகி விட்டது. இதெற்கு எல்லாம் காரணம்.ஆசிரியர்களை மட்டும் சாரும் .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.