திருநெல்வேலி:பாளை., அண்ணா விளையாட்டு அரங்கில் வரும் 14ம் தேதி வரை நீச்சல் பயிற்சி முகாம் நடக்கிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை பிரிவு சார்பில் நீச்சல் கற்றுக் கொள் திட்டத்தின் படி பாளை., அண்ணா விளையாட்டு அரங்கில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தில் ஏப்ரல் 2012 முதல் தொடர்ச்சியாக என்.ஐ.எஸ்.பட்டம் பெற்ற பயிற்சியாளர்களால் 12 மணிநேரத்தில் நன்றாக நீந்தும் அளவிற்கு நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடந்துவருகிறது. பயிற்சியில் சிறுவர், சிறுமியர், மாணவ, மாணவிகள் மற்றும் ஆண், பெண் என மொத்தம் 390 பேர் பயிற்சி பெற்று அரசு சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தின் 21வது பியிற்சி முகாம் வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. பயிற்சியில் சேர விரும்புவோர் சலுகை கட்டணம் ரூ.650 மட்டும் செலுத்தி பயன் பெறலாம்.
பயிற்சி முகாமில் 12 நாட்களில் தினமும் பயனாளிகள் விரும்பும் நேரத்தில் 1 மணி நேர பயிற்சி வீதம் 12 மணி நேரத்தில் நன்றாக நீந்தும் அளவிற்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி தினமும் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெறும். பெண்களுக்கு பெண் பயிற்சியாளரால் காலை 11 மணி முதல் 12 மணி வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இத்தகவலை விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம் செய்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.