district news | நெற் பயிரில் குலை நோய் விவசாயிகளுக்கு "அட்வைஸ்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெற் பயிரில் குலை நோய் விவசாயிகளுக்கு "அட்வைஸ்'

Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:நெற் பயிரில் குலை நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாளை வேளாண்மை உதவி இயக்குனர் மகாலிங்கம் தெரிவித்துள்ளதாவது:
பாளை வட்டாரம் முன்னீர்பள்ளம், தருவை கிராமங்களில் நடவு செய்யப்பட்டுள்ள பிசான பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே குலை நோய் பரவியுள்ளது. இந்த நோயானது இலைகளில் நீண்ட கண் வடிவ புள்ளிகள் ஆரம்பத்தில் தோன்றும். மையப் பகுதி சாம்பல் நிறமாகவும், அதனை சுற்றி பழுப்பு நிறமாகவும் இருக்கும். நாளடைவில் இப்புள்ளிகள் இணைந்து பெரும் புள்ளிகளாக மாறும். நோய் தாக்குதல் அதிகமானால் பயிர் வளர்ச்சி குன்றி இலைகள் காய்ந்து விடும். நெல் மணிகள் பால் பிடிக்காமல் பதராகி விடும்.
குலை நோய் அறிகுறிகள் தென்பட்ட உடன் யூரியா போன்ற தழைச் சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். இந்நோயை கட்டுப்படுத்த டிரைசக்ஸ்சோல் என்ற பூஞ்சான மருந்தை ஏக்கருக்கு 120 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் தூரில் படும்படி காலை அல்லது மாலையோ தெளிக்க வேண்டும். தெளிக்கும் முன் நிலத்தில் தண்ணீரை வடித்து விட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை