திருநெல்வேலி:மாநில அளவிலான திறனாய்வு தேர்வில் கடையம் பள்ளி மாணவர் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
சென்னை வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் மாநில அளவிலான அறிவியல் திறனாய்வு தேர்வு நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாநில அளவிலான இத்தேர்வில் கடையம் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 5ம் வகுப்பு மாணவர் நன்னன் மூன்றாம் நிலை தேர்வில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.
சென்னை முத்துராமலிங்கம் சார்பில் வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்தை, மாணவர் நன்னனிடம் இங்கிலாந்து டாக்டர் ரோசன்னா யங்கர் மற்றும் அலிசியா பாலி வழங்கி கவுரவித்தனர்.
சாதனை படைத்த மாணவன் நன்னனை, பள்ளி முதல்வர் பிரேமா பாராட்டினார். இதில் சமூக ஆர்வலர் திருமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.