Advertisement
பறக்கும் படை பணிகளை புறக்கணிப்போம்... முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் "அதிரடி'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,06:31 IST

திருநெல்வேலி:பிளஸ் 2 அரசு தேர்வு பறக்கும் படைகளை புறக்கணிப்போம் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் "அதிரடி'யாக முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பமாகிறது. இதனையொட்டி பிராக்டிக்கல் தேர்வுகள் கடந்த 4ம் தேதி ஆரம்பமாகி தொடர்ந்து நடக்கிறது. வரும் 18ம் தேதிக்குள் பிராக்டிக்கல் தேர்வுகளை முடிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 பொது தேர்வில் தேர்வு மையங்களில் தேர்வுகளை கண்காணிக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் பல்வேறு பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
பறக்கும் படையில் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு நாளும் உழைப்பூதியமாக 100 ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது 10 நாட்கள் முதல் 12 நாட்கள் வரை இப்பணியில் ஈடுபட்டனர். இதில் நெல்லை கல்வி மாவட்டத்தில் அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த பறக்கும் படையினருக்கு இதுவரை உழைப்பூதியம் வழங்கப்படவில்லை. இதுசம்பந்தமாக தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் வரும் பிளஸ் 2 தேர்வுக்கு முன்பாக பறக்கும் படையினருக்கு உழைப்பூதியம் வழங்க வேண்டும். இல்லையெனில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுக்கு பறக்கும் படை பணிகளை புறக்கணிக்க முதுகலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுசம்பந்தமாக நெல்லையில் நேற்று முதன்மை கல்வி அலுவலர் காதர் சுல்தானை சந்தித்து, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் ஜோஸ்வா கிறிஸ்டோபர், நெல்லை கல்வி மாவட்ட தலைவர் ஆசீர் சார்லஸ் நீல் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
07-பிப்-201307:10:13 IST Report Abuse
mk வர வர மக்கள் யாரும் வேலை செய்வதை விட அதை புறக்கணிப்பதி்ல் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.. இப்படியே போங்க, இந்தி்யா நல்லா "டெவலப்" ஆகும்.. அடுத்த தலைமுறையும் உங்களைத் தானே பின்பற்றும்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.