சிட்னி : பசிபிக் கடலில் உள்ள, சாலமன் தீவில், பூகம்பம் தாக்கியதில், பல வீடுகள் தரைமட்டமாயின. பூகம்பத்தை தொடர்ந்து சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது.தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில், நேற்று, 8 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதனால், இந்த தீவில் உள்ள பல பகுதிகள் அதிர்ந்தன. ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இந்த பூகம்பத்தின் அதிர்வு, பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.இந்த பயங்கர பூகம்பத்தால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஐந்து அடி உயரம் கொண்ட கடல் அலைகள், தீவுகளை தாக்கின. இதனால், பெரிய பாதிப்பு ஏற்படாததால், சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.இந்த பூகம்பத்தால், சான்டாகுருஸ் தீவு தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு, ஐந்து பேர் இறந்துள்ளதாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால், மக்கள் அருகே உள்ள மலைகளுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.