பிப்ரவரி 21 பிரணாப்பின் கன்னி உரையுடன் துவங்குகிறது மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : நடப்பு நிதியாண்டிற்கான பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 21ம் தேதி துவங்க உள்ளது. கூட்டத் தொடரின் துவக்க நாளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உரை நிகழ்த்த உள்ளார். ஜனாதிபதி ஆன பிறகு பார்லிமென்ட்டில் அவர் ஆற்றும் முதல் உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.


கூட்டத் தொடர் :

15வது லோக்சபாவின் 13வது கூட்டத் தொடரும், ராஜ்யசபாவின் 228வது கூட்டத் தொடருமான இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 21ம் தேதி துவங்க உள்ளது. பிப்ரவரி 21ம் தேதி துவங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பிப்ரவரி 28ம் தேதி மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக பிப்ரவரி 26ம் தேதி மத்திய ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பகுன்குமார் பன்சல் தாக்கல் செய்ய உள்ளார். அதன் மீதான பொருளாதார புள்ளி விபர அறிக்கை பிப்ரவரி 27ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிப்ரவரி 21ம் தேதி துவங்கும் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. பின்னர் மார்ச் 22 முதல் ஏப்ரல் 22 வரை விடுமுறை விடப்பட்டு, கூட்டத்தொடர் ஏப்ரல் 23ம் தேதி துவங்கி மே 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.


அரசு திட்டம் :

இந்த கூட்டத் தொடரின் துவக்கத்திலேயே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இம்மசோதாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடத்தப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் பெறுதல் ஆகிய அனைத்தும் கூட்டத் தொடரின் துவக்கத்திலேயே நடத்தப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் விடுமுறை காலத்திற்கு முன்னதாக இம்மசோதாவை நிறைவேற்ற அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதே போன்று நிலுவையில் உள்ள கிரிமினல் சட்டம் 2012 தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் பிப்ரவரி 03ம் தேதி பரிந்துரை செய்து, தீர்க்கப்பட உள்ளது.


கிரிமினல் சட்டம் :

கிரிமினல் சட்டம் 2013 ன் படி, எந்த ஒரு நபரோ பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பலத்த காயங்கள் அல்லது மரணம் ஏற்பட்டால் அக்குற்றத்திற்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வரை உச்சகட்ட தண்டனை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் மக்களின் எதிர்ப்புக்கள் காரணமாக இந்த தண்டனை வழிமுறைகள் காண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவே பிரிந்து வாழும் கணவன், தனது மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்தால் அதற்கு 7 ஆண்டு வரை தண்டனை தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amirthalinkam.s - namakkal,இந்தியா
07-பிப்-201319:22:40 IST Report Abuse
amirthalinkam.s கன்னி உரையில் ஊழல் லிஸ்டும் படிப்பாங்களா?
Rate this:
Share this comment
Cancel
amirthalinkam.s - namakkal,இந்தியா
07-பிப்-201318:11:20 IST Report Abuse
amirthalinkam.s வாங்க, வழக்கம் போல் வறுமை ஒழிப்பு வாசகங்களை ஒப்புவித்து செல்லுங்கள் .......
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
07-பிப்-201316:35:51 IST Report Abuse
K.Balasubramanian பட்ஜெட்டுக்கு முன்னால் பசி ஆற்ட காவிரியில் சுப்ரீம் கோர்ட் ஆணையை அமலாக்கவும். இல்லையேல் பாரதியின் பாட்டை அறிந்தவர்களின் சாபம் பெற தயாராக வேண்டியதிருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
ஹரிபாஸ்கர் - திருச்சி,இந்தியா
07-பிப்-201313:02:04 IST Report Abuse
ஹரிபாஸ்கர் பட்ஜெட் போட்டு கிழிச்சிங்க,,,, எங்க எப்படி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தலைல மிளகாய் அரைக்கலாம், ஒரு வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் பணக்கார முதலாளிகளுக்கும், மந்திரிகளுக்கும் எப்படி சலுகை கொடுக்கலாம்ன்னு மரமண்டைகளை வச்சி ரூம் போட்டு யோசிச்சி வந்து அதை சபைல படிக்க இருக்கும் ரெண்டு நாளைக்கு முன்னாடி ஏதாவது ஒரு ஊழல் வெளில வரும்,,,,எதிர் கட்சிக்கு விருந்து வச்ச மாதிரி, கூட்ட தொடர் பூரா ஒரு ஆணி கூட கழட்ட மாட்டீங்க,,,,,,,, இதே நாடகம் தானா இந்த தடவையும்,,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்