உஜ்ஜயினி : லோக்ஆயுக்தா சிறப்பு போலீஸ் படை நடத்திய அதிரடி சோதனையில் உஜ்ஜயினியை சேர்ந்த வன அதிகாரிக்கு ரூ.70 கோடிக்கு சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது. பசன்த் குமார் சிங் என்ற அந்த வன அதிகாரிக்கு ரூ.50 லட்சம் வங்கி சேமிப்பும், ரூ.25 லட்சத்திற்கு எல்.ஐ.சி., யில் முதலீடு, ஒரு கிலோ தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.8 லட்சம் ரொக்க பணம் உள்ளது. இவருக்கு ரூ.70 லட்சத்திற்கு 15 வங்கிகள் கணக்குகள் உள்ளது. 25 ஆண்டுகளில் இவர் ரூ.80 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். இவர் ஓய்வு பெற இன்னும் 10 வருடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொத்துக்கள் அனைத்தும் தற்போது பரிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.