Karunanidhi Press Meet in Trichy | விஜயகாந்த் நெருங்குவது பொறுக்கவில்லையா? கருணாநிதி எரிச்சல்| Dinamalar

விஜயகாந்த் நெருங்குவது பொறுக்கவில்லையா? கருணாநிதி எரிச்சல்

Updated : பிப் 07, 2013 | Added : பிப் 07, 2013 | கருத்துகள் (64)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Karunanidhi Press Meet in Trichy விஜயகாந்த் நெருங்குவது பொறுக்கவில்லையா? கருணாநிதி எரிச்சல்

திருச்சி: தி.மு.க.,வுடன் விஜயகாந்த் நெருங்குவது பொறுக்கவில்லையா என நிருபர்களிடம் கருணாநிதி எரிச்சலுடன் கேள்வி எழுப்பினார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி பிரச்னையில் தி.மு.க., தொடர்ந்து பார்லிமென்ட்டிலும், மத்திய அரசையும் வலியுறுத்தி வருகிறது. லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வருமா என்று எனக்குத் தெரியாது. முலாயம் சிங்கின் கருத்து வெறும் யூகம‌ே. எனக்கு யூகமும் இல்லை; வியூகமும் இல்லை. செயற்குழு, பொதுக்குழு கூடி இது குறித்து முடிவு செய்யும். "நானே எல்லாம்" என்ற வகையில் செயல்படும் இந்த அரசில் அனைத்து கட்சிக் கூட்டத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. விஜயகாந்த் என்னைச் சந்திக்க இருக்கிறார் என்று நீங்கள் கூறித்தான் தெரியும். தி.மு.க.,வுடன் விஜயகாந்த் இணக்கமாக இருக்க விரும்புகிறார் என்றால் அது உங்களுக்குப் பொறுக்காதே.

ராஜபக்ஷேயின் இந்திய வருகை குறித்து மத்திய அரசிடம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். மத்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஸ்டாலின் தலைமையிலான குழு டில்லி சென்றது, டெசோ தீர்மானங்கள் தொடர்பாக வெளிநாட்டுத் தூத்ர்களைச் சந்திக்கத்தான்; இதை பத்திரிகைகள்தான் திசை திருப்பி வேறு மாதிரியான செய்திகளை வெளியிட்டுள்ளன. மத்திய அமைச்சர் அழகிரி மீது குறை கூறும் முதல்வர் ஜெயலலிதா, முதலில் தனது சொத்துக்குவிப்பு வழக்கை முடிக்கட்டும். தமிழக அமைச்சர்களின் பேச்சுக்கெல்லாம் கருத்து கூறுவதில் பயன் இல்லை; அதைக் கேட்டு தங்களைத் திருத்திக் கொள்ளும் பண்பு அவர்களிடம் இல்லை. ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
priyadharshan - Chennai,இந்தியா
08-பிப்-201308:10:36 IST Report Abuse
priyadharshan அவரின் வரவை அவ்ளோ ஆவலுடனா எதிர்பார்கிறீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
08-பிப்-201307:39:37 IST Report Abuse
Raj விட்டுதான் பாருங்களேன் ரெண்டு பெரும் சேர்ந்து அடிக்கபோகும் கொட்டத்தை
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-பிப்-201305:27:38 IST Report Abuse
villupuram jeevithan அடுத்து மோடியும் என்னை நெருங்குகிறார் என்று சொல்லப்போகிறார்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-பிப்-201305:26:11 IST Report Abuse
villupuram jeevithan பாவம், அவர் என்ன செய்வார், மக்கள் இப்படி கூட்டணிக்கு அலையவிட்டுவிட்டர்களே? அதுவும் வலியப் போய்?
Rate this:
Share this comment
Cancel
R.Subramanian - Frisco,யூ.எஸ்.ஏ
08-பிப்-201303:15:50 IST Report Abuse
R.Subramanian அய்யா பெரியவரே உம்முடைய பேச்சை யாரும் கேட்பதும் இல்லை, கேட்க போவதும் இல்லை. ஏன் வீணாக பத்திரிகையாளரிடம் ஆத்திரப்படுகிரீர் ? போதும் உங்கள் குடும்பத்துக்காக சேர்த்து வைத்தது. இன்னுமா பதவி ஆசையும் பொருள் ஆசையும் அடங்கவில்லை. விஜயகாந்த் தனியாக நின்று அல்லது வேறு யாருடனாவது கூட்டணி வைத்து ஜெயிதுவிட்டு போகட்டும். திமுக உடன் சேர்ந்தால் அவர்களுக்கு இப்போது இருப்பதும் போய்விடும். சோனியாவிடமே தொடர்ந்து மண்டியிட்டு மன்றாடிபாருங்கள் காங்கிரஸ்-இல் தொடர்வதற்கு..
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
08-பிப்-201300:03:23 IST Report Abuse
jagan என்ன இருந்தாலும்,,,,, தெலுங்கு தெலுங்கோட தான் சேரும்.... அது தான் சமூக நீதி.....
Rate this:
Share this comment
Cancel
amirthalinkam.s - namakkal,இந்தியா
07-பிப்-201319:18:17 IST Report Abuse
amirthalinkam.s உஷாரய்யா .... உஷாரு.......தட்டி பார்க்கறாரு முரசை .....
Rate this:
Share this comment
Cancel
davan - ,jhhgvbh,ஐக்கிய அரபு நாடுகள்
07-பிப்-201318:21:57 IST Report Abuse
davan திருடன்?????????
Rate this:
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
08-பிப்-201311:28:05 IST Report Abuse
K.Sugavanamஹிந்துவா?சாஸ்திரி(சாஸ்திரின்னா கலைஞர்.இதுவும் அவரோட கண்டு பிடிப்பே) முன்பு ஒரு சமயம் அப்படித்தானே சொன்னார்?...
Rate this:
Share this comment
Cancel
amirthalinkam.s - namakkal,இந்தியா
07-பிப்-201318:08:31 IST Report Abuse
amirthalinkam.s அய்யா விஜயகாந்த், கவனம்.... கவனம்.... கவனம்....சுயமா சிந்திங்கே
Rate this:
Share this comment
Cancel
elangovadikal - chennai,இந்தியா
07-பிப்-201317:47:40 IST Report Abuse
elangovadikal கருணாநிதி ,திருமாவளவன் இருவரும் தமிழின துரோகிகள் . உண்மையான தமிழன் - பிரபாகரன் . இனத்துக்காக தன குடும்பத்தை இழந்தான். இந்த இருவரும் பதவிக்காக சுயமரியாதை எழந்தவர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை