ராய்ப்பூர் : சட்டீஸ்கர் மாநிலத்தில், கற்பழிப்பு வழக்குகளை விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை விரைந்து வழங்கும் பொருட்டு, விரைவுகோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளதாக, ஐகோர்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டீஸ்கரின் காங்கேர் மாவட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் பழங்குடியின மாணவிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இவ்வழக்குகளுக்காக விரைவுகோர்ட் அமைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ரமன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு சட்டீஸ்கர் ஐகோர்ட் நீதிபதிகள் குழுவும் அனுமதியளித்துள்ளதையடுத்து, இந்த விரைவுகோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளன. சட்டீஸ்கருக்கு முன்னதாக, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகளை விசாரிக்கும் பொருட்டு, கேரளாவில் சிறப்பு மற்றும் டிவிஷன் பெஞ்ச்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.