புதுடில்லி : வறட்சியால் கருகியுள்ள பயிர்களை காப்பாற்ற, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு 2.44 டிஎம்சி நீர் தேவைப்படுவதாக, காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்ததுள்ளதன் விளைவாக, காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் நீரின்றி கருகியுள்ளன. தங்களுக்கு உரிய நீர் வழங்கக்கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீர்தேவை குறித்து ஆய்வு செய்ய, மத்தியக்குழுவை, காவிரி டெல்டா பகுதிகளுக்கு அனுப்பியது. அக்குழு, நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டு, அவ்வறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. அவ்வறிக்கையின்படி, தற்போதைய நிலையில், கருகும் பயிர்களை காப்பாற்ற 2.44 டிஎம்சி நீர் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், 12 டிஎம்சி நீர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.