பீகார் : கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையாகியுள்ள வாலிபர் தற்போது 300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி அளித்து வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தீபக் குமார். நிலப்பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதலில், நில உரிமையாளர் ஒருவரை கொலை செய்த வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தீபக், கடந்த 2005ம் ஆண்டு விடுதலையானார். சிறைக்கு சென்றவர்கள், மீண்டும் தீய நடவடிக்கைகளிலேயே ஈடுபடுவர் என்ற எழுதப்படாத சட்டத்தை உடைக்கும் பொருட்டு, சிறைவாசத்தை அடுத்து மேற்படிப்பை படித்து, இன்று ஏழை மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக கல்வி சேவை அளித்து வருகிறார். முதலில் தான் தயங்கியதாகவும், பின் ஏழை குழந்தைகளின் பள்ளிக்கு செல்ல இயலாத நிலையை கண்டு இம்முடிவை துணிவுடன் மேற்கொண்டதாக அவர் கூறினார். தன்னிடம் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்க முன்வந்த போதிலும், போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், 370 ஏழை குழந்தைகளுக்கு மட்டுமே, தற்போது கல்விச் சேவை அளித்து வருவதாகவும், தமக்கு பலர் ஆதரவளித்து வருவதாகவும், தான் சிறை சென்றதற்கு காரணமான அந்த நில உரிமையாளர்களின் உறவினர்களின் குழந்தைகளும் தன்னிடம் பயின்று வருவதாக அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள். ஒவ்வொரு குற்ற செயல்களிலும் குற்றவாளிகள் பிடிபடும் செய்திகள் வெளிவரும்போது, அவன் மீது ஏற்கனவே 12 கொலை வழக்குகளும் 9 திருட்டு வழக்குகளும் மற்ற இத்யாதி இத்யாதி வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பன போன்ற விவரங்கள் எரிச்சலூட்டுவதாக இருக்கும். ( இத்தனை வழக்குகள் நிலுவையிலிருந்தும் அவனை ஏன் வெளியே நடமாட விட்டார்கள் என்றும் - எத்தனை முறை மாட்டினாலும் அவனுங்க திருந்தவே மாட்டனுங்களான்னும். இதுல, செய்திகளில் அவனுங்களுக்கு அவர்/இவர்னு மரியாதைவேறு ). பீகாரைச் சேர்ந்த இவரைப் போன்ற தான் திருந்தியதோடு மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடன் செயல்படுபவரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.