புதுடில்லி: மத்திய குழுவின் அறிக்கைப்படி, காவிரியில் 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது என தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருகும் டெல்டா பயிர்களைப் பாதுகாக்க காவிரியில் 12 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய குழுவை காவிரி டெல்டா பகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த குழு டெல்டா பகுதிகளை ஆய்வு செய்து 2.44 டி.எம்.சி., தண்ணீர் போதும் என அறிக்கை தாக்கல் செய்தது. இதை ஏற்று காவிரியில் 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குழு வெறும் 10 சதவீத பகுதிகளை மட்டுமே பார்வையிட்டுள்ளதாகவும், இந்த தண்ணீர் போதுமான அளவு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.