திருத்தணி: திருவள்ளூர் அருகே பைக்கில் செனற இரு பள்ளி மாணவர்கள், தனியார் பஸ் மோதிய விபத்தில் பலியாயினர். திருவள்ளூர், கனகம்மாள் சத்திரம், நிஜாம்பட்டு பகுதியைச்சேர்ந்தவர் வெங்கடேசன் (17) மற்றும் பிரதீப். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்டூ படித்து வருகின்றனர். இருவரும், இன்று காலை 9 மணிக்கு பைக்கில், திருவள்ளூரில் இன்று வெளியான ஒரு தியேட்டரில் விஸ்வரூபம் சினிமா சென்றனர். ராமஞ்சேரி வளைவு ஒனறில் வந்து கொண்டிருந்த போது, தாம்பரத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் அவர்கள் வந்த பைக் மீது மோதியது.இதில் இருவரும் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியாயினர். சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த ஏ.எஸ்.பி. விஜயகுமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் சென்னை-திருப்பதி செல்லும் சாலையில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.