கோஹிமா : நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா, இன்று மற்றும் நாளை அங்கு தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. 2003ம் ஆண்டிற்கு பிறகு, அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே உள்ளது. இந்நிலையில், ஆட்சியை கைப்பற்றும் பொருட்டு, காங்கிரஸ் கட்சி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளது. இதனிடையே, நாகாலாந்து வந்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, இன்று மற்றும் நாளை மோகோக்சங் மற்றும் திமாபூர் பகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். வரும் 9ம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங்கும், 14ம் தேதி கட்சி துணை தலைவர் ராகுலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர். எங்கள் மாநில மக்களுக்கு, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் மேம்பாடு உள்ளிட்டவைகளிலேயே கவனம் உள்ளதே தவிர, அரசியல் கட்சிகள் மீது தாங்கள் நம்பிக்கை வைப்பதில்லை என்று நாகா மாணவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.