புதுடில்லி: மத்திய குழு அளித்த ஆய்வறிக்கைப்படி, காவிரியில் 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறக்க, கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தமிழகம், நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்த்து புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் கர்நாடகம் 12 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட உத்தரவிடக்கோரி, தமிழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்த கர்நாடகா, தங்களது அணைகளில் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால், தமிழகம் கோரும் தண்ணீரை திறந்து விட இயலாது என மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து, காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய நீர்வளக் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான தண்ணீரின் அளவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய வேளாண்மைத்துறை துணை கமிஷனர் (பயிர்கள்) பிரதீப்குமார்ஷா தலைமையில், மத்திய நீர்வளத்துறை முதன்மை பொறியாளர்கள் மகேந்திரன், ஜேக்கப், மத்திய பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரேந்திர சர்மா உள்ளிட்டோர் காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்தனர். திருச்சி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் நெற்பயிர்களை ஆய்வு செய்த அவர்கள், விவசாயிகளின் கோரிக்கைகளையும் பதிவு செய்தனர். இதையடுத்து தங்கள் ஆய்வை முடித்துக்கொண்ட அவர்கள், நேற்று தங்களது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில், தமிழகத்தில் 14 இடங்களில் தாங்கள் ஆய்வு நடத்தியதாகவும், போதிய நீர் இல்லாததால் குறைவான மகசூலையே விவசாயிகள் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா பகுதிகளில் ஒரு நாள் மட்டும் பார்வையிட்டு, அறுவடை செய்யப்பட்டிருந்த நிலப்பரப்பு, கருகிய பயிர்களின் நிலப்பரப்பு, தண்ணீர் தேவைப்படும் பயிர்களின் நிலப்பரப்பு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட முடியாது என்றாலும், தாங்கள் பார்த்த வரையில், 50 சதவீத சாகுபடிப் பரப்பில் விவசாயிகள் தங்கள் சாகுபடியை முடித்து விட்டதாகவும், 40 சதவீத பரப்பில் அறுவடைக்கு பயிர்கள் தயாராக உள்ளதாகவும், மீதமுள்ள 10 சதவிதம் பயிர்களுக்கே தண்ணீர் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பயிர்களுக்கு 2.44 டி.எம்.சி., தண்ணீர் போதுமானது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இன்று இந்த வழக்கு, நீதிபதி லோதா, சலமேஸ்வர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய குழுவினரின் அறிக்கையை ஏற்று, தமிழகத்திற்கு 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஏற்க தமிழகம் மறுப்பு:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு ஊருல புருஷன் ,பொண்டாட்டி இருவரும் சந்தோசமா இருந்தனர்.... என்ன மாயமோ தெரியில ....அவர்களுக்குள் சண்டையும் சச்சரவும் ஆரம்பமாகியது.... இது நித்தம் தொடர்கதையாகியது..மனைவிடம் சண்டை போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டான்.... அந்த சமயம் பார்த்து ஒரு பிச்சை காரன் அம்மா தாயே கொஞ்சம் பிச்சை போடுங்க என்றான் .....சத்தம் கேட்டு வெளியே வந்தவள் ...வூடு இருக்குற நிலையில உனக்கு சோரா கேட்குது அததெல்லாம் போடமுடியாது போ என்று உள்ளே சென்று விட்டாள்....இதை பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு .....அந்த வீட்டு அம்மா உன்னிடம் என்ன சொன்னங்க... என்றான் ... அய்யா பசியா இருக்கு கொஞ்சம் சோறு போடுங்கம்மா என்றேன் முடியதுன்னுடாங்கையா என்றான் ....அவ எப்படி சொல்லலாம் ....சரி வா என்னுடன்....ஏய் இங்கே வா இவனுக்கு சோறு போடமுடியாது என்றாயா .....ஆமாம் என்றாள்.... நீ என்ன சொல்லுவது... நான் கொஞ்சமாவது போட்டுதான் அனுப்புவேன் என்று அடுக்களைக்குள் சென்றான் ....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.