திருச்சி : ஒரு கூட்டத்தினரால் பாழ்படுத்தப்பட்டுள்ள திராவிடர்களின் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகளை புதுப்பிக்க இத்தருணத்தில் நாம் உறுதி கொள்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி பேசினார். ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா இல்ல திருமணம், திருச்சி தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்திப் பேசிய கருணாநிதி கூறியதாவது, பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் கட்டிக்காத்த திராவிடர்களின் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகள், இன்று ஒரு அமைப்பினரால் தொடர்ந்து பாழ்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வமைப்பிடம் இருந்து திராவிடர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை கட்டிக்காக்கும் கடமை நமக்கு இருப்பதால், நாம் அதை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு உறுதி ஏற்போம் என்று கருணாநிதி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
"பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் கட்டிக்காத்த திராவிடர்களின் கலாச்சாரம்" - காமராஜரை இந்த பட்டியலில் சேர்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன். பாகவதம் சொல்கிறது - பக்தி பிறந்தது தமிழகத்தில் (திராவிட தேசம்) என்று. கடவுள் இல்லை என்று சொல்லி அந்த பெருமையை குழி தோன்டிப்புதைத்து இந்த பின்னேற்று கழகங்கள். அத்துடன் விட்டால் பரவாயில்லை அவர்களுக்கு அறிவு இவ்வளவுதான் என்று விட்டுவிடலாம் - இவர்களில் பெரும்பாலவர்கள் பின்கட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் - முக உட்பட. ஜாதகம் பார்த்து துண்டு போடுவது போன்ற கேவலமான செயல்களை செய்கிறார்கள். தங்கள் வாழ கடவுள் இல்லை என்று சொன்னவர்கள். இதை கலாசாரம் என்று சொல்வதா? தென்னாட்டிலே கோடிகோடியாக பொன்னையும் பொருளையும் கொட்டி கோவில்கள் கட்டினார்களே அவர்களுக்கு இல்லாத அறிவியல் ஞானமா இந்த கூட்டத்துக்கு இருக்கப்போகிறது? முதலில் இந்த கழகங்கள் நடத்தும் தொலைக்காட்சிகளில் உண்மையை பேசச்சொல்ல வேண்டும். விரசமான "மானாட மயிலாட" போன்ற நிகழ்சிகளை நடத்தக்கூடாது....பின்னர் பேசலாம் கலாச்சாரத்தை பற்றி..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.