பாபர் மசூதி இடிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்ய தாமதம் ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், சதிக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட அத்வானி மற்றும் 19 பேருக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய காலதாமதம் செய்தது ஏன் என சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக, சதி செய்ததாக கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டிலிருந்து மட்டும் (ஐ.பி.சி., 120 பி) 21 பேரையும் விடுவித்து, சிறப்பு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. மற்ற பிரிவுகளின் கீழ் இவர்கள் மீதான விசாரணையை தொடரலாம் எனவும் சிறப்பு கோர்ட் தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி அலோக் குமார் சிங் தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் 90 நாட்களுக்குள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சி.பி.ஐ., காலதாமதமாக, 6 மாதங்களுக்குப்பிறகே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஏன் இவ்வளவு கால தாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்கிறீர்கள் என சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வக்கீல் ராவ், பல்வேறு தஸ்தாவேஜ்கள் இந்தியில் இருந்ததால் அதை மொழி பெயர்க்க தாமதமாகி விட்டதாக தெரிவித்தார். பின்னர் பேசிய நீதிபதிகள், சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அதில் மாற்றங்கள் ஏதும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும், இன்றைய விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில் ஆஜராக வேண்டிய அடிசனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ். சண்டியாக் ஆஜராகவில்லை. இதை கண்டித்துள்ள சுப்ரீம் கோர்ட், அவர் இந்த வழக்கை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டாரா எனவும் கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

சி.பி.ஐ.,க்கு கண்டனம்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை தேசிய குற்றம் என வர்ணித்த சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கண்டம் தெரிவித்துள்ளது. தாங்களோ (சுப்ரீம் கோர்ட்) அல்லது விசாரணை கோர்ட்டோ முடிவு செய்யும் வரை இந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
07-பிப்-201319:25:05 IST Report Abuse
Yoga Kannan அவர்களுக்கு கதை சொல்லவே நேரம் கிடைக்கவில்லை ....பின்னே கோர்ட் தானே வழி நடத்த வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
K.RAMAN. - chennai,இந்தியா
07-பிப்-201318:39:35 IST Report Abuse
K.RAMAN. சிபிஐ என்றால் என்ன அர்த்தம் என்றே உச்ச நீதிமன்றம் புரிந்துகொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
amirthalinkam.s - namakkal,இந்தியா
07-பிப்-201318:01:28 IST Report Abuse
amirthalinkam.s அரசுதான் சி.பி.ஐ.,....சி.பி.ஐ. தான் அரசு. நீதிமன்றங்கள் எந்த உத்தரவு போட்டலும், நடைமுறையை கேட்டாலும் ஒரே பதில் தான். அது மன்மோகன்சிங்
Rate this:
Share this comment
Cancel
Anvar-Indian - shuwaikh,குவைத்
07-பிப்-201317:38:51 IST Report Abuse
Anvar-Indian உச்ச நீதிமன்றமே ,,, நீங்க நல்லவரா.... கெட்டவரா..... ?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
07-பிப்-201316:26:45 IST Report Abuse
ஆரூர் ரங இடிக்கப்பட்டது மசூதியே இல்லை இந்துக் கோவில்ன்னு உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி மூணு வருஷமாச்சு. ( பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை கோவில்களை இடித்து திருப்பணி செய்யவேண்டியது இந்துக்களின் கடமை. அதானை செய்ய அவர்களுக்கு உரிமை இல்லையா? ) அதனை இடித்ததாக இந்துக்கள் மேல் வழக்குப் போட்டதே தப்பு. இப்போ அப்பீல் வேற பண்ணனுமாம். கர்நாடக சட்டசபைத் தேர்தல் நேரத்தில் அப்படி வழக்குப்போட்டு உதை வாங்க காங்கிரஸ்காரர்கள் ஒன்றும் கிறுக்கர்களல்ல.
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
07-பிப்-201316:17:18 IST Report Abuse
mangai ஒரு சந்தேகம்.. விவரம் தெரிந்தவர்கள் விளக்கவும்..அது உண்மையிலேயே பாபரோட மசூதி தானா..
Rate this:
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
07-பிப்-201316:10:14 IST Report Abuse
Rss எங்கள் அத்வானி மற்றும் நரேந்திர மோடி வாழ்க .. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தான் பாகிஸ்தான் பன்னாடைகள் அடங்குவார்கள்
Rate this:
Share this comment
Cancel
SYED USMAN SYED MUSTHAFA - kuala lumpur,மலேஷியா
07-பிப்-201316:02:46 IST Report Abuse
SYED USMAN SYED MUSTHAFA நீதி இன்னும் மதில்மேல் பூனையாகத்தானே நிற்கிறது...? நீதிக்கு மாறுவேடம் அணிந்து விடாமல், அசலாக ஒளிரட்டும்...
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
07-பிப்-201316:02:04 IST Report Abuse
விருமாண்டி அத்வானி வாழ்க .. விஸ்வரூபம் பிரச்சனை முடிவுக்கு வந்துட்டுல. அதான் பாபர் மசூதிக்கு வந்துட்டாங்க ... முடிஞ்சுது முடிஞ்சிபோச்சி. புதுசா யோசிங்க ... அத்வானி வாழ்க ..
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-பிப்-201315:22:08 IST Report Abuse
Swaminathan Nath பாபர் பெயரில் நினைவு சின்னம் தேவையா,/அவர் நாட்டிற்கு என்ன செய்தார்?????? .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்