மும்பை : மும்பையில் பாலம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலியானதைத் தொடர்ந்து, கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 3 பேரை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு, பாதி நிலையில் கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒருபகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணையை துவக்கினர். பால கட்டுமான பணியை செய்து வரும் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.