Advertisement
என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: குஷ்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,15:43 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 07,2013,15:55 IST

திருச்சி: தி.மு.க.,வின் அடுத்த தலைவர் குறித்து வாரப்பத்திரிக்கை ஒன்றில் தான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக, நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தி.மு.க., பேச்சாளர்களில் ஒருவரும், நடிகையுமான குஷ்பு சில நாட்களுக்கு முன் வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில், தி.மு.க.,வின் அடுத்த தலைவர் குறித்து அவர் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஷ்பு அளித்த பேட்டியில், தி.மு.க.,வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வர வேண்டும் என கருணாநிதி தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், நாம் அப்படி ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. தனக்குப்பின் சமூகப்பணிகளை ஸ்டாலின் மேற்கொள்வார் என்றும், தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஸ்டாலினை வழிமொழிவேன் என்று தான் தி.மு.க., தலைவர் கூறியிருக்கிறார் என்றும், அடுத்த தலைவர் யார் என்பதை பொதுக்குழு கூடிதான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.


கருணாநிதியின் கருத்துக்கு அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அண்ணன், தம்பிக்குள் எவ்வித பிரச்னையும் இல்லை என்றும், வெளியில் சம்பந்தம் இல்லாதவர்கள் பேசிக்கொள்வதற்கு எல்லாம் பதில் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.


தி.மு.க., தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, திரும்பவும் கூறுகிறேன். அடுத்த தலைவர் யார் என்பதை பொதுக்குழு தான் முடிவு செய்யும். கருணாநிதி முடிவு செய்து விட்டார் என்பதற்காக, அடுத்த தலைவர் ஸ்டாலினாகத்தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சியில் யாராகவும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.


குஷ்புவின் இந்த கருத்து தி.மு.க.,வில் குறிப்பாக ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் என்ற பொதுக்கருத்து உருவாகி வரும் நிலையில், குஷ்புவின் இந்த கருத்து தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.



வீடு மீது தாக்குதல்:


இந்நிலையில், திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குஷ்பு சென்று விட்டார். இந்நிலையில், இன்று மதியம் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கல்வீசப்பட்டது. இதில் குஷ்புவின் கார் கண்ணாடி மற்றும் விளக்குகளின் கண்ணாடி உடைந்தது.



குஷ்பு மீதும் தாக்குதல்:


இதனிடையே, திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த குஷ்பு மீது செருப்பு வீசப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.


தாக்குதல் சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய குஷ்பு, தான் எப்போதும் தி.மு.க., தலைவர் கருணாநிதி வழியில் நடப்பதாகவும், தான் கூறிய கருத்துக்களை சிலர் தவறாக புரிந்து கொண்டு தன் வீட்டின் மீதும், தன் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், அவர்கள் குறித்து விசாரிப்பதாக கருணாநிதி உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (22)
sundaram - Coimbatore,இந்தியா
07-பிப்-201318:11:33 IST Report Abuse
sundaram நீங்க சொன்ன கருத்து தப்பில்லை. இதே கருத்தை நீங்க மதுரையில வந்து சொல்லி இருந்தா இந்நேரம் உங்களுக்கு மதுரை மல்லியால அபிஷேகம் கூட பண்ணி இருப்பாங்க. அது சரி உங்க பேரு குசுப்பா கொழுப்பா ?
Rate this:
3 members
15 members
121 members
Share this comment
Murugesh - Dammam,சவுதி அரேபியா
07-பிப்-201318:09:50 IST Report Abuse
Murugesh குஷ்பூ பேசாம புள்ள குட்டியையும் புருசனையும் ..பார்த்துக்கம்மா ...நமக்கு எதுக்கு இதெல்லாம்.......ஆடிய ஆட்டமெல்லாம் போதும்...........
Rate this:
2 members
6 members
102 members
Share this comment
pancha - Tampa ,யூ.எஸ்.ஏ
07-பிப்-201318:07:25 IST Report Abuse
pancha Is there a possibility of kushboo threating dmk leadership?. May be she can be next jaya or mayawathi. who knows
Rate this:
9 members
49 members
33 members
Share this comment
லார்டு லபக்கு தாஸ்... - லார்டு லபக்கூர்,இந்தியா
07-பிப்-201318:00:58 IST Report Abuse
லார்டு லபக்கு தாஸ்... இது ஒரு நல்ல சம்பவம்.../// வில்லங்கமாக பேட்டி குடுத்த குஷ்புவையும் பாராட்டலாம்../// கல், மற்றும் செருப்பு வீசியவர்களையும் பாராட்டலாம்...///
Rate this:
38 members
1 members
109 members
Share this comment
G.Prabakaran - Chennai,இந்தியா
07-பிப்-201318:00:20 IST Report Abuse
G.Prabakaran தலைவர் வழி மொழிந்துமா உங்களுக்கு புரிய வில்லை. திமுகவின் ஜனநாயகம் என்பது தலைவரின் எண்ண ஓட்டம் படி அனைவரும் பொதுக் குழுவில் எடுக்கும் முடிவே ஜன நாயக முடிவு. இதனை புரியாமல் உளறி கொட்டியதற்காக நீங்கள் தாக்கப் பட வேண்டியவரே.
Rate this:
3 members
30 members
46 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-பிப்-201317:53:03 IST Report Abuse
Nallavan Nallavan குஷ்பு அக்காவின் இந்த பதில், பட்டும்,,,, படாமத்தான் இருக்கு .... கலைஞரோட அறிவிப்பு குறித்து ஸ்டாலினிடம் கேட்டால் கூட அவர் இப்படித்தான் சொல்வார் .... ஒரே வித்தியாசம் ..... ஸ்டாலின் சங்கர மடத்தை வம்புக்கிழுத்து பேசுவார்....இதில் கூட குஷ்பு மீது மூர்க்கக் கோபம் கொள்வோர் சிந்திக்கத் தெரியாத மாக்கள் .... ஆனால் திராவிடக் கட்சிகளுக்கு இந்தத் தற்குறிகளே தேவை ....
Rate this:
45 members
1 members
44 members
Share this comment
amukkusaamy - chennai,இந்தியா
07-பிப்-201317:50:27 IST Report Abuse
amukkusaamy இந்த பொம்பளைங்களே இப்படித்தான். முதலாளி நல்லா குத்துங்க, முதலாளி குத்துங்க
Rate this:
5 members
0 members
117 members
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-பிப்-201317:47:49 IST Report Abuse
s.maria alphonse pandian திரித்து போடுவதற்கென்றே பல பத்திரிகைகள் உள்ளன..எனவே அரசியலில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்....திமுகவில் ஜனநாயகம் உள்ளது என்பதையே குஷ்பு கூறியுள்ளார்..அதில் தவறேதும் இல்லை..கலைஞரே நினைத்தாலும் பொதுக்குழு..செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவின்றி யாரும் தலைவராக முடியாது என்பது உண்மை...
Rate this:
153 members
1 members
105 members
Share this comment
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-பிப்-201317:30:34 IST Report Abuse
Jeyaseelan சிவப்பு நிறத்தில் உலாவும் கருப்பு ஆடு ....... களை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
Rate this:
34 members
0 members
29 members
Share this comment
KMP - குட்டி ஜப்பான் ,இந்தியா
07-பிப்-201317:30:28 IST Report Abuse
KMP சரியான அடி போல...... பாவம் .... வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும் ...
Rate this:
0 members
0 members
90 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.