புதுடில்லி: ரயில் கட்டணங்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் கட்டணங்கள் கடந்த ஜனவரி மாதம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ரூ. 6600 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி இல்லாத காரணத்தால் ரயில்வே கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 26-ம் தேதி பார்லிமென்ட்டில் ரயி்லவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபின்னர் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள்ளாக ரயில் கட்டண உயர்வு அமலாகலாம் என தெரிகிறது. இந்த கட்டண உயர்வுமூலம் ரூ.12,000 கோடி நிதி திரட்டப்பட உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.