சென்னை : ரசிகர்களின் பேரன்பிற்கு எதுவும் ஈடாகாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படம், இன்று தமிழ்நாட்டில் வெளியானது. திரைப்படம் குறித்து சென்னையில் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தி்ததார். அப்போது அவர் கூறியதாவது, படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு முதல் நன்றி. படம் எதிர்பார்க்காத அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் ரசிகர்களே ஆவர். அவர்களின் பேரன்பிற்கு முன் எதுவும் ஈடாகாது. ரசிகர்களும், தமிழக மக்களும் காட்டிய அன்பில், நான் பாடம் கற்றேன். நான் கடனாளியாகி விடுவேன் என்பதை பொறுக்க முடியாத எனது ரசிகர்கள், தங்களது வீட்டுச்சாவி, பத்திரங்களை எனக்கு அனுப்பினர். இதன்மூலம் என் மீது அவர்கள் வைத்துள்ள பேரன்பு வெளிப்பட்டுள்ளது. நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தபோது, எனக்கு பங்காளியாக செயல்பட்டு துயர் துடைக்க உதவிய ஊடகங்களுக்கும் தனது நன்றியை தெரிவி்ததுக் கொள்வதாக அவர் கூறினார். முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன் என்றும், விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் துவங்கி விட்டதாக அவர் மேலும் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.