மும்பை: மது அருந்தும் வயதினை அதிகரி்த்து உத்தரவிட்ட மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கில், அரசு உத்தரவிற்கு இடைக்கால தடைவிதிக்க கோர்ட் மறுத்துவிட்டது.
மகாராஷ்டிரா மாநில அரசு, மது அருந்துவோர் சட்டபூர்வ வயதினை 21-ல்இருந்து 25 ஆக அதிகரித்து கடந்த 2009-ம் ஆண்டு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் இம்ரான்கான், மும்பை ஐகோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அதில் அரசின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மோஹித்ஷா, மேத்தா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதிகள் அரசு ஆணைக்கு தடைவிதிக்க முடியாது , இது தொடர்பாக ஏப்.15-ம் தேதிக்கு மகாராஷ்டிரா அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.