புதுடில்லி : மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன தலைவர் விஜய் மல்லையா சந்தித்துப் பேசியுள்ளார். மீளமுடியாத கடன் சுமையால், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திக்கி திணறிக் கொண்டிருக்கும் நிலையில், இச்சந்திப்பு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 15 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் இருந்ததையடுத்து, கிங்பிஷர் நிறுவனத்தின் விமான சேவை, சமீபத்தி்ல் மத்திய விமானத்துறை கட்டுப்பாட்டு இயக்குனரகத்தால் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிற்கு ரூ. 290 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக சிலநாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்நிலையில், இவ்விவகாரத்திற்கு அவர் தீர்வு காணும் பொருட்டு, மல்லையா, மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை சந்தித்துப் பேசியுளளதாக கூறப்படுகிறது, பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளரையும அவர் சந்தித்துப் பேசியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.