புதுடில்லி: டீசல் விலை உயர்வையடுத்து, ரூ. 3300 கோடி கூடுதல் சுமையை சந்தித்து வரும் நிலையில், மீண்டும் ரயில் கட்டணங்கள் உயர்வை, ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் மறுக்கவில்லை.
10 ஆண்டுகளுக்குப்பிறகு, ரயில்வே கட்டணங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயர்த்தப்பட்டன. ரயில்வே கட்டண உயர்வை அறிவித்த ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால், வரும் பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படாது என உறுதியுடன் தெரிவித்தார். இந்நிலையில், டில்லியில் ரயில்வே பட்ஜெட் தயாரிப்பில் மும்முரமாக உள்ள பன்சால், நிருபர்களிடம் பேசினார். அப்போது நிருபர்கள் எதிர்வரும் பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுமா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ரயில்வே பட்ஜெட்டிற்கு இன்னும் 19 நாட்கள் உள்ளன. அது வரை பொறுத்திருங்கள் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பின், ரயில்வேக்கு சுமார் ரூ. 6600 கோடி கூடுதல் வருவாய் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ. 10.80 உயர்த்தப்பட்டுள்ளதால், ரயில்வேக்கு ரூ. 3300 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது வெறும் ரூ. 3300 கோடி அளவுக்கு மட்டுமே கூடுதல் வருவாய் வந்து கொண்டிருக்கிறது. தற்போது புதிய ரயில் திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. புதிய ரயில் பாதை அமைக்கவும், ரயில் நிலையங்கள் மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு அதிகளவில் நிதி தேவைப்படுகிறது. ரயில் போக்குவரத்து மூலமாக வரும் வருவாய் தவிர, மற்ற திட்டங்களில் இருந்து வருவாய்க்கு முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தற்போது ரயில்வேக்கு சொந்தமாக 43 ஆயிரம் ஹெக்டேர் காலி நிலம் உள்ளது. அதை வர்த்தகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் வருவாய்க்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பன்சால் தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சரின் இந்த பேச்சு, வரும் 26ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் மேலும் ஒரு கட்டண உயர்வு இருக்கும் என்பதை சூசகமாக தெரியப்படுத்தியுள்ளதால், ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.