மும்பை : அரசு மருத்துவமனையில் பிறந்து 6 மாதமே ஆன பெண் குழந்தையிடம், பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்துள்ள சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில், தெருவோர வியாபாரியின் குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தது. பெண்குழந்தையின் மர்ம உறுப்பில், காயங்கள் இருந்ததையடுத்து, அது பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதன் அடிப்படையில் போலீசிற்கு குழந்தையின் தாயார் புகார் அளித்திருந்தார். இப்புகாரை ஏற்க மறுத்த போலீசார், எலி கடித்ததால் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினர். பின் குழந்தையிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கூர்மையான ஆயுதத்தை கொண்டு மர்ம உறுப்பில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. பாலியல் துன்புறுத்தலின் பேரில் இது நடைபெற்றுள்ளதாக டாக்டர்கள் கூறினர். போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து, குழந்தையை கையாண்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அடப்பாவிகளா உங்க கொடுமைகளுக்கு அளவே இல்லையா ? குழந்தையும் தெய்வமும் ஒன்று. ஒன்றும் தெரியாத குழந்தையை கூட .........ச்சே வெட்கமும் வேதனையுமா இருக்கு ? இன்னும் இந்த அரசு கற்பழிப்புக்கு ஆதரவா தானே செயல்படுது. மிருகங்கள் கூட அதற்குரிய காலநேரத்தில் தான் இனப்பெருக்கம் செய்ய ஈடுபடும். மனிதன் இவ்வளவு கேவலமா போய்ட்டான். பாரதம் அழியும் காலம் தொடங்கிவிட்டது. அழியட்டும் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.