கோல்கட்டா: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், பிலிப்பைன்ஸ் பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவசர அவசரமாக கோல்கட்டாவில் தரையிறக்கப்பட்டது. அவர் ஆண் குழந்தை பெற்றார். துபாயில் இருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், வங்கதேசம் வழியாக பிலிப்பைன்சின் மணிலா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் கெமோகெஹஜினா சுபேல்விடா (30) என்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் பயணித்தார். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர் ஆண் குழந்தை பெற்றார்.உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாக தகவல் விமான பைலட்டிற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த விமானம் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் விமான நிலைய மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் சிகி்ச்சை அளித்தனர்..
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.