பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக இரண்டு தேர்வு மையங்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் முதல் தேதி துவங்குகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஏழாயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதுதவிர, தனியாக தேர்வு எழுதவும் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டு வரை தேர்வுக்காக, 16 மையங்களும், தனித்தேர்வாளர்களுக்கு மூன்று மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
நடப்பாண்டில், தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதால், தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், என, கல்வித்துறை சார்பில் தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்படி, கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், ஜமீன்ஊத்துக்குளி மற்றும் வடசித்தூர் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு பள்ளிகளிலும், தலா 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
ஜமீன்ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, இதுவரை பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
படிக்கும் பள்ளியில் இருந்து, தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளி நீண்ட தூரத்தில் இருப்பதால் மாணவர்களும் பல ஆண்டுகளாக தவித்து வந்தனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "கடந்தாண்டு வரை 16 ஆக இருந்த தேர்வு மையம், இந்தாண்டு 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தனித்தேர்வாளர்களுக்கான மையத்தில், இதுவரை எவ்வித மாற்றமும் செய்யவில்லை. புதிதாக அமைக்கப்பட்டுள்ள மையங்களில், மாணவர்களுக்கான இருக்கை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை சரியான முறையில் உள்ளதா என்பதை தேர்வுக்கு முன்னதாக ஆய்வு செய்யப்படும். வசதிகள் குறைவாக இருந்தால், உடனடியாக அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.