வால்பாறை:கல்வி ஆண்டு முடியும் தருவாயில் மலைப்பகுதியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படவில்லை.
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம் உள்ள 93 பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களிடம், கல்வியை ஊக்கும்விக்கும் வகையில் தமிழக அரசு இலவச பஸ் பாஸ், பள்ளி சீருடை, நோட்டுபுத்தகம், காலனி, ஸ்கூல் பேக் உள்ளிட்ட 16 இலவச பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
ஆனால் வால்பாறை மலைப்பகுதியில் படிக்கும் மாணவர்களுக்கு பஸ்பாஸ், நோட்டுபுத்தகம், பள்ளி சீருடை மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 13 பொருட்களும் இன்று வரை வழங்கப்படவில்லை.
கல்வி ஆண்டு முடியும் தருவாயில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச வடிவியல் பெட்டி, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலனி வழங்கப்படவில்லை.
கல்வி ஆண்டு முடிய இரண்டு மாதமே உள்ள நிலையில், அரசின் இலவச பொருட்கள் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் மலைப்பகுதியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் உள்ளனர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,
"சமவெளிப்பகுதியில் முதல் கட்டமாக மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மலைப்பகுதியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே பள்ளி சீருடை, நோட்டுபுத்தகம், பஸ்பாஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பொருட்கள் விரைவில் வழங்கப்படும்' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.