கோவை : சாலை விபத்தைக் குறைக்கும் நோக்கத்துடன், நேற்று லாலி ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். விபத்தை குறைக்கும் நடவடிக்கையாக, கோவை மாநகர போலீசார், பஸ் படிக்கட்டில் பயணம் செய்வோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். படிக்கட்டில் பயணம் செய்வோர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், பெற்றோர், மாணவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை லாலி ரோடு பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். நகரின் உள்ளே போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், லாரியில் பாரம் ஏற்றியிறக்க நேரம் ஒதுக்குவது தொடர்பாகவும் ரங்கே கவுடர் வீதியில் உள்ள வணிகர்களுடன் போக்குவரத்து போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். லாரி போக்குவரத்து நெரிசலை குறைக்க, தங்களுக்குள் பேசி முடிவு எடுக்க வேண்டியதிருப்பதால், வியாபாரிகள் ஒரு வார கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து, வரும் 12ம் தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பல்வேறு அசம்பாவித சம்பவங்களை தடுக்க, கார் கண்ணாடிகளில் ஒட்டப்படும் கருப்பு பிலிம்களை தவிர்க்க வேண்டும் என்றும், மீறி ஒட்டப்படும் வாகனங்களின் பிலிம்கள் போலீசாரால் அகற்றப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.