Advertisement
2.4 தான் ! தமிழகம் கேட்டதோ 9 டி.எம்.சி., * சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி :"தமிழகத்திற்கு, 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்தது. "9 டி.எம்.சி., தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்' என்ற, தமிழக அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

தமிழக டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்களை காப்பாற்ற, 9 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட, கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, இம்மாதம், 4ம் தேதி, நீதிபதி, ஆர்.எம்.லோதா மற்றும் நீதிபதிகள் செலமேஸ்வர் மற்றும் மதன் பி லோகுர் ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. "தமிழகத்திற்கு, 2 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், "9 டி.எம்.சி., தண்ணீர் கட்டாயம் வேண்டும்' என, தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, தமிழக டெல்டா பகுதிக்கு சென்று, நிலைமையை நேரில் ஆய்வு செய்து, இரண்டு நாட்களில் அறிக்கை தருமாறு, மூன்று பேர் கொண்ட குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. மத்திய உணவு துறை ஆணையர் பிரதீப்குமார் ஷா தலைமையில், அத்துறை அதிகாரிகள், கே.எஸ்.ஜேக்கப் மற்றும் ஏ.மகேந்திரன் ஆகியோர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அந்த குழுவினர், 375 கி.மீ., பயணம் செய்து, 14 இடங்களில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரித்தனர்.
55 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் : அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: டெல்டா பகுதியில், விவசாயம் நடக்கும் நிலப்பரப்பில், 50 சதவீத நிலத்தில் அறுவடை முடிந்து விட்டது; 40 சதவீத நிலங்களில், இன்னும் சில நாட்களில் அறுவடை நடக்க உள்ளது; 10 சதவீத பரப்பில் மட்டும் தான் பயிர்கள் உள்ளன. அந்த பயிர்களில், 45 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு, ஒருமுறை நீர் பாய்ச்ச, 0.71 டி.எம்.சி., தண்ணீரும், 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்களுக்கு, இரு முறை நீர் பாய்ச்ச, 1.73 டி.எம்.சி., என, மொத்தம், 2.44 டி.எம்.சி., தண்ணீர் மட்டும் தான் தேவைப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஷெட்டரிடம் வலியுறுத்தல் : இந்த அறிக்கை, சுப்ரீம் கோர்ட் பதிவாளர் வசம், நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை மீண்டும் துவங்கியது."தமிழகத்திற்கு, 2.44 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதன் மூலம், தமிழக அரசின், 9 டி.எம்.சி., தண்ணீர் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது. எனினும், இந்த தீர்ப்பையும் மதிக்க, கர்நாடகா தயாராக இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியான நேரம், கர்நாடக சட்டசபை கூட்டம், பெங்களூரு நகரில் நடந்து கொண்டிருந்தது. "சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டாலும், தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரை கூட கொடுக்க கூடாது' என, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும், முதல்வர், ஜெகதீஷ் ஷெட்டரிடம் வலியுறுத்தினர். பதிலளித்து, ஷெட்டர் கூறியதாவது:

சுப்ரீம் கோர்ட் உத்தரவால், கர்நாடக விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க, கடுமையான முடிவுகளை கூட எடுக்க, அரசு தயாராக உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன், சட்ட வல்லுனர்களின் கருத்து கேட்கப்படும். நானும், நீர் வள துறை அமைச்சர், பசவராஜ் பொம்மையும், இன்று டில்லி செல்கிறோம். அங்கே சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து தக்க முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சித்தராமையாவின் கோரிக்கையான, "கர்நாடகா சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களை மாற்ற வேண்டும்' என்பதை, முதல்வர் ஷெட்டர் நிராகரித்தார்.

கர்நாடக விவசாயிகள் உரிமை : நீர் பாசன துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை கூறும் போது, ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை, உடனடியாக நிறைவேற்றும் எண்ணம் இல்லை. முதலில், சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை செய்த பிறகு தான் எந்த முடிவும் எடுக்கப்படும்,'' என்றார்."தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது' என வலியுறுத்தி, சட்டசபையில், மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், "தர்ணா' போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதாவிலிருந்து விலகி, "கர்நாடக ஜனதா கட்சி' என்ற, புதிய கட்சியை துவக்கியுள்ள, முன்னாள் முதல்வர், எடியூரப்பா, "காவிரி நீரில், கர்நாடக விவசாயிகள் உரிமை காக்கப்பட வேண்டும்' என வலியுறுத்தி, பெங்களூரு முதல் மைசூரு வரை, நேற்று பாத யாத்திரை மேற்கொண்டார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்