BJP chief on fertilizers scam | உர ஊழல் ; சிறையில் அடைக்க வேண்டும் ; ராஜ்நாத் சிங் ஆவேசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உர ஊழல் ; சிறையில் அடைக்க வேண்டும் ; ராஜ்நாத் சிங் ஆவேசம்

Updated : பிப் 09, 2013 | Added : பிப் 08, 2013 | கருத்துகள் (10)
Advertisement
BJP chief on fertilizers scam

சென்னை: ""உர ஊழலில் ஈடுபட்டோரை, சிறையில் அடைக்க வேண்டும்,'' என, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். பா.ஜ., தேசிய தலைவராக, இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள ராஜ்நாத் சிங், @நற்று சென்னை வந்தார். அவருக்கு, தமிழக பா.ஜ., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மத்தியில், அவர் பேசியதாவது:கொட்டிக் கிடக்கும் வளம் :

காங்கிரஸ் அரசு, அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், நாட்டிற்கு பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தியுள்ளது.கனிம வளம், மனித வளங்கள் கொட்டிக் கிடக்கும் இந்தியாவை முன்னேற்ற, அன்னிய முதலீடு தான் அவசியம் என, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்து, உள்ளூர் வணிகத்தை முடக்க முனைந்துள்ளது. அண்டை நாடுகளுடனும் சமூகமான உறவில்லை. நாட்டின் எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானை கண்டிக்க முடியாத, வலுவிழந்த அரசாக மத்திய அரசு உள்ளது. ராணுவ வீரர்களின் தலையை துண்டித்த, பாகிஸ்தானின் உறவுகளை துண்டிக்க வேண்டும் என்ற, பா.ஜ., கோரிக்கைக்கு, பதில் சொல்ல முடியாமல், மத்திய அரசு தவிக்கிறது.


சி.பி.ஐ., விசாரணை: விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யும் திட்டத்தில், பெரும் மோசடி நடந்துள்ளது. 3.5 கோடி விவசாயிகளுக்கு, கடன் தள்ளுபடி செய்ததாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், மத்திய தணிக்கை துறை நடத்திய ஆய்வில், விவசாய கடன் தள்ளுபடியில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல், மத்திய அரசின் புதிய உர கொள்கையால், விலையேற்றம் ஏற்பட்டதோடு, பெரும் ஊழலும் நடந்துள்ளது. இதில், யார் தொடர்புடையவர்கள் என்று, அனைவருக்கும் தெரியும். எனவே, ஊர ஊழலில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.சம உரிமை :

போரினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மறுவாழ்வு ஆணையம் மூலம், இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் படி, அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்க வேண்டும். இதற்கு, இலங்கை அரசை, மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க, உரிய நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுக்க வேண்டும்.பார்லி., முடக்கம் :

ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வை, "காவி பயங்கரவாதம்' என, குற்றம் சுமத்திய, உள்துறை அமைச்சர் ஷிண்டே, தன் கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதை செய்ய மறுத்தால், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை, நடத்த விடமாட்டோம். தற்போதுள்ள நிலைமையில், அடுத்த ஆட்சியை பா.ஜ., தான் அமைக்கும் என, பிரபல சர்வே நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இவ்வாறு, ராஜ்நாத் சிங் பேசினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா
08-பிப்-201306:47:05 IST Report Abuse
Vilathur Nandhiyar உரத்தில் ஊழலா ? இதற்க்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சி ? தலைவரின் புதல்வன் உர அமைச்சரான போதே உங்களுக்கு தெரியாதா ..உர அமைச்சகம் ஊழலில் பொங்கி பொழிய போகிறதென்று ? ...ஊழல் செய்யாவிட்டால் அவர் எப்படி தலைவரின் புதல்வனாக இருக்க முடியும் ? இப்போது பிரச்சனை அண்ணன் ஊழல் பெரிதா அல்லது தங்கை ஊழல் பெரிதா ? தலைவர் ஆட்சியில் பூச்சி மருந்து ஊழல் ..இப்போது உர ஊழல் ....? தமிழன் புகழ் ஊழல் ஓங்குக
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
08-பிப்-201306:28:49 IST Report Abuse
Panchu Mani இவர் டெல்லில வாக்கிங் போறதால இவ்ளோ தைரியமா பேசறார்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-பிப்-201305:41:28 IST Report Abuse
villupuram jeevithan ஆமா, இவரு மனிதனுக்கு உரத்தை (ஹார்லிக்ஸ்) பற்றி பேசுகிறாரா? அல்லது பயிருக்கு உரத்தை பற்றி பேசுகிறாரா?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-பிப்-201305:38:50 IST Report Abuse
villupuram jeevithan மோடி என்னை நெருங்குகிறார் என்று அறிக்கை விடக்கூடிய சமயத்தில் இவர் ஏன் இப்படி சொல்லுகிறார்? இவருக்கு பொறுக்கவில்லையே?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-பிப்-201305:37:13 IST Report Abuse
villupuram jeevithan அப்பா பூச்சி மருந்து ஊழல், பிள்ளையோ உர ஊழல். நல்லாத்தான் இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
08-பிப்-201302:33:04 IST Report Abuse
Vettri ஊழல் செய்தவர்கள் அனைவரையும் உள்ளே போட்டுவிட்டால் பின் அரசியல் செய்வதற்கு ஆளே இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Tamil A - chennai,இந்தியா
08-பிப்-201301:11:56 IST Report Abuse
Tamil A //தற்போதுள்ள நிலைமையில், அடுத்த ஆட்சியை பா.ஜ., தான் அமைக்கும் என, பிரபல சர்வே நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இவ்வாறு, ராஜ்நாத் சிங் பேசினார்.//ஜான் ஏறினா முழம் சறுக்குது .ஏற்கனவே சாதுக்கள் சொல்லி விட்டனர் NDA விலிருந்து பாஜக வெளியேற வேண்டும் என்று பிறகு எங்கிருந்து தனி மெஜாரிட்டி கிடைக்கிறது நீங்க ஆட்சியை அமைக்கிறது ...
Rate this:
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
08-பிப்-201301:11:27 IST Report Abuse
குடியானவன்-Ryot மத்திய பிரதேசத்துக்கு இலங்கை அதிபர் திரு. ராஜபக்சே அவர்கள் வந்த போது பாஜக முதல்வர் திரு. சிவராஜ் சிங் சவ்கான் அவர்கள் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்தார், அப்போது தெரியவில்லையா உங்களுக்கு இலங்கை தமிழர் படும்பாடு. தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் தான் ஓட்டுக்காக இலங்கை தமிழர்கள் விவகாரத்தை கையில் எடுக்கிறார்கள் என்றால் நீங்களுமா, திரு. ராஜபக்சே அவர்களிடம் பரிசுப்பொருள் வாங்கிய திருமதி. கனிமொழி, திருமதி. சுஸ்மா சுராஜ் போன்றவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு இனி இலங்கை தமிழர்களை பற்றி பேச அருகதை இல்லை. இதன்மூலம் இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய தேசிய கட்சிகளிடம் சரியான் புரிதல் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவர்களுக்கு சரியான புரிதல் வரும்போது ஒரு தமிழனும் இலங்கையில் இருக்கமாட்டான். இதை எல்லாம் நினைக்கும்போது தமிழக மக்களாகிய நாம் தமிழகத்தில் தமிழ்மக்களுக்காக பாடுபடும் ஒரு தலைவனை கூட இதுவரை உருவாக்கவில்லை என்று எண்ணி வெட்கி தலை குனிகிறேன்.... என்று தணியும் எம் தொப்புள்கொடி உறவின் சுகந்திர தாகம்.....
Rate this:
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
08-பிப்-201306:52:58 IST Report Abuse
ஆரூர் ரஙஉண்மையில் இலங்கை அரசுக்காக இங்கு பாடுபடுவது அங்கு முதலீடு செய்திருக்கும் இந்திய பணக்காரர்கள். இங்கை விட அங்கு லாபம் அதிகம். அப்பணக்காரர்களை எதிர்த்துக்கொண்டால் பல நீரா ராடியாக்கள் தோன்றி அரசையே மாற்றுவர். பண்பல அரசியலை எந்த தேசீயக் கட்சியும் எதிர்த்து உயிர்வாழமுடியாது. அரசியல் சாராத மக்கள் இயக்கங்கள்தான் இதற்கு எதிராகப் போராட முடியும்...
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
08-பிப்-201300:22:29 IST Report Abuse
Devanand Louis தங்கை கனியின் விண்ணை முட்டும் ஊழலை விட அஞ்சாநெஞ்சனின் ஊழல் குறைவுதான் , குடும்பங்கள் ஒரு ஊழல் பல்கலைகழகம் என்று நிருபித்துவிட்டார் அஞ்சாநெஞ்சன் அழகிரி .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை