தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதிக்கும், பெண் பூனைப் படை பாதுகாப்பு அளிக்க, தேசிய பாதுகாப்புப் படை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்களின் பாதுகாப்பில் ஈடுபடும், முதல் பெண் பூனைப் படையினர் என்ற அந்தஸ்தை, இப்படையினர் பெறுகின்றனர்.
நாட்டின் முக்கிய இடங்களின் பாதுகாப்பு, கடத்தப்பட்டவர்களை மீட்பது, முக்கிய அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு ஆகிய பணிகளுக்காக, தேசிய பாதுகாப்புப் படை, 28 ஆண்டுகளுக்கு முன், உருவாக்கப்பட்டது. இதில், ஆண்கள் மட்டுமே, சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, கறுப்புப் பூனைப் படையினராக உருவாக்கப்பட்டு வந்தனர். முதல்முறையாக, பெண்களையும், பூனைப் படையினராக உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், தேசிய பாதுகாப்புப் பணியில் சேர்க்கப்பட்டனர்.
பெண் பூனைப் படையினரை, நாட்டின், "இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பில் இருக்கும், இரு பெண் தலைவர்களுக்கு பயன்படுத்த, தேசிய பாதுகாப்புப் படை முடிவு செய்தது. இதையடுத்து, "இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பில் இருக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதா, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோரின் பாதுகாப்புக்கு, பெண் பூனைப் படையினரை அனுப்ப, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. ஆனால், பாதுகாப்புப் பெறும் இரு பெண் தலைவரும், இதற்கு சம்மதம் அளிக்காததால், பெண் பூனைப் படையினரை அனுப்புவது தாமதப்பட்டது என, தேசிய பாதுகாப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, பெண் பூனைப் படையினரை பாதுகாப்புக்கு அனுப்ப, மத்திய உள்துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
"இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வேண்டும் என்று தான், ஒருவர் கேட்க முடியும். பாதுகாப்பில் ஈடுபடுபவர்கள் ஆணா, பெண்ணா என்பதை, பாதுகாப்பு கோருபவர் முடிவு செய்ய முடியாது. ஆண் பூனைப் படையினருக்கு இணையான அனைத்து, பயிற்சிகளையும், பெண் பூனைப் படையினரும் பெற்றுள்ளனர். பாதுகாப்பு வீரர்களில், ஆண், பெண் வேறுபாடு இல்லை என, தேசிய பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
திரும்பப் பெற்றுக்கொள்ளும் :
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தலைவிக்கு பெண் பூனைப் படை பாதுகாப்பெல்லாம் சரி. சம்பளம் யாரு கொடுக்கிறது. எவ்வளவு தான் மக்கள் தாங்குவாங்க. கட்சியோட சொத்து மதிப்பு 100 கோடிக்கும் மேலன்னு அம்மாவே சொல்லுச்சு. அந்த காச பேங்குல போட்டு அதுல வர வட்டிப் பணத்துல அவங்களுக்கு சம்பளம் கொடுத்தா புண்ணியமாப் போகும். இது அம்மாவுக்கு மட்டுமில்ல.எல்லக் கட்சிக்காரங்களுக்கும் தான். எல்லக் கட்சிகளோட சொத்து மதிப்ப வச்சு அதுக்குத் தகுந்த மாதிரி பாதுகாப்புக்கு ஆளுங்களை போடுங்க. ஏன்னா எல்லா உசிரும் சமம் தான். இவங்களுக்கு பாதுகாப்புக்கு நாம வரி கட்டுறோம். அதுக்கு பதிலா அவங்க நமக்கு பட்டை நாமத்தைப்போடுறாங்க.
குமரன். திருச்சி.
""ஆண் பூனைப் படையினருக்கு இணையான அனைத்து, பயிற்சிகளையும், பெண் பூனைப் படையினரும் பெற்றுள்ளனர். பாதுகாப்பு வீரர்களில், ஆண், பெண் வேறுபாடு இல்லை"" உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்று சரிதான். ஆனால், இவர்களைக் குறிப்பாக இவ்விரு பெண்மணிகளின் பாதுகாப்புக்கு மட்டும் அனுப்பப்படுவது குறித்துதான் கேள்வியே? ஏன் இப்பிரிவிலுள்ள மற்றவர்களுக்கும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப் பதிவில்லை. இன்றைய சூழலில், ஆண் பெண் இருவரையும் சரிவிகித எண்ணிக்கையிலேயே அனுப்ப வேண்டும். பிறகு வேண்டுமானால் படிப்படியாக எண்ணிக்கையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டுமே தவிர பெண் பூனைப்படைகள் அனுப்பப்பட்டு ஆண் பூனைப் படைகளை திரும்பப் பெற்றுக்கொள்வது, வேண்டுமென்றே பாதுகாப்பை குறைக்கும் உள்நோக்கத்துடன் செய்யப்படும் நடவடிக்கைதான் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.