கிள்ளை:சிதம்பரம் அருகே தேசிய கடல் ஆராய்ச்சி மையம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் கிர்லோஷ்குமார் ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அடுத்த கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட முடசல் ஓடை கடற்கரையோரம் கடல் புறம்போக்கு இடத்தில் மத்திய அரசின் தேசிய கடல் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது. சுனாமி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள். கடல் நீரை குடிநீராக மாற்றுவது.
ஆழ்கடல் பகுதியில் வளங்கள், கனிமங்கள், கடலுக்கு அடியில் தட்பவெட்ப நிலை உள்ளிட்டவைகளை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசு மூலம் இங்கு தேசிய கடல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுகிறது.
அதற்காக முடசல் ஓடை கிராமத்தில் கடற்கரையோரம் கடல் புறம்போக்கு பகுதியில் 250 ஏக்கர் கையகப்படுத்தப்படுகிறது.
நேற்று, கலெக்டர் கிர்லோஷ்குமார் முடசல் ஓடையில் இருந்து படகில் அதிகாரிகளுடன் சென்று கடற்கரையோர பகுதியை ஆய்வு செய்தார்.
ஆராய்ச்சி செய்வதற்கு முடசல் ஓடை கிராமத்தில் கிழக்கு பக்கத்திலும், நிர்வாக அலுவலகங்கள் கட்டடங்கள் கட்டுவதற்கு முடசல் ஒடை தெற்கு பக்கத்திலும் இடம் ஒதுக்குமாறும், இதனால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடையூறு இல்லாமல் இடத்தை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.
சப் கலெக்டர் சுப்ரமணியன், தாசில்தார் தனசிங், பேரூராட்சி தலைவர் வித்யாதித்தன், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன், செயல் அலுவலர் ஆறுமுகம், கவுன்சிலர்கள் திருவள்ளுவர், விஜயன், சர்வேயர்கள் மணி, குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சேதுமாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.