Karunanidhi slams TN Govt | அ.தி.மு.க., ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள்; கருணாநிதி | Dinamalar
Advertisement
அ.தி.மு.க., ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள்; கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருச்சி: ""கடந்த, 19 மாத, அ.தி.மு.க., ஆட்சியில், 896 கொலைகள் நடந்துள்ளன; இதுதான் இன்றைய சட்டம் - ஒழுங்கின் நிலை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி., திருச்சி சிவா மகள் திருமணம் மற்றும், தி.மு.க., நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று, திருச்சி வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கே: இலங்கை விவகாரத்தில், இனியாவது மத்திய அரசு விழிக்க வேண்டும் என்பதை, நீங்கள் முன்பே சொல்லியிருந்தால், லட்சக்கணக்கான உயிரை காப்பாற்றியிருக்கலாமே?ப: தி.மு.க., மட்டுமல்ல, இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்ட அனைத்து கட்சியும், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.கே: காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியே வரவேண்டும் என, வைகோ கூறியுள்ளாரே?ப: நான் வெளியே வந்தால், அவர்கள் உள்ளே செல்ல தயாராக இருக்கின்றனர்.கே: காவிரி டெல்டா விவசாயிகளுக்கு, 1,000 கோடி ரூபாய், ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., மத்திய அமைச்சர்கள் வலியுறுத்துவார்களா?ப: தி.மு.க., மத்திய அமைச்சர்கள் மட்டுமல்ல, எம்.பி.,க்களும் வலியுறுத்தியுள்ளனர்.கே: காங்., கூட்டணியில் உள்ள, முலாயம்சிங் யாதவ், செப்டம்பர் மாதம் லோக் சபா தேர்தல் வரும் என, கூறியுள்ளாரே?ப: அவர் கூறியது யூகம்.கே: உங்களது யூகம்?ப: நாங்கள் யூகத்திலும் இல்லை; வியூகத்திலும் இல்லை.கே: லோக்சபா தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து?ப: தி.மு.க., எப்போதும், இது போன்ற பெரிய விஷயங்களை, பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டித்தான் முடிவெடுக்கும்.கே: ராகுல், காங்., துணை தலைவரானதை பாராட்டி, நீங்கள் கடிதம் எழுதியதற்கு பதில் இல்லை. ராகுலை சந்திக்க, டில்லி சென்ற ஸ்டாலினையும், அவர் சந்திக்கவில்லையே?ப: ஸ்டாலின், பாலு உள்ளிட்டோர், "டெசோ' சார்பாக, டில்லியில் உள்ள, வெளிநாட்டு தூதரை சந்திக்க சென்றனர். சில பத்திரிகைகள் அபாரமாக கற்பனை செய்து, இதை திசை திருப்ப முயற்சித்துள்ளன.கே: எதிர் கட்சியினர் மீது, தொடர்ந்து வழக்குகள் பாய்கிறதே?ப: விஜயகாந்த் மீதா... இந்த அரசுக்கு, வழக்கு போடுவது, வழக்கமானது தான்.கே: காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது போல, தமிழகத்தில் நடத்த வலியுறுத்துவீர்களா?ப: இங்கு எல்லாம், "நானே' என்ற ஆட்சி நடக்கிறது. இதில், ஆல் - பார்ட்டியாவது, ஆள் இல்லாத பார்ட்டியாவது.கே: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட, தி.மு.க., தடையாக இருப்பதாக, தமிழக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளரே?ப: அ.தி.மு.க., அமைச்சர்கள் பேச்சை நான் கவனிப்பது இல்லை. அதுபற்றி கருத்து சொல்ல ஆரம்பித்தால், அந்த கருத்துக்களை கேட்டு, தங்களை திருத்தி கொள்பவர்களாக, இந்த ஆட்சியில் யாரும் இல்லை.கே: இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவீர்களா?ப: எங்களது எதிர்ப்பே, போராட்டத்துக்கான அறிகுறி. தமிழர் உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கே: மத்திய அரசு, தி.மு.க.,வின் நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளதே? "சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம். இருந்தாலும் தீய, மதவாத சக்திகள், உள்ளே வரக்கூடாது என்பதற்காக, வேறு வழியின்றி அன்னிய முதலீட்டை ஆதரிக்கிறோம்' என்று கூறியுள்ளீர்களே? கல்லக்குடி உட்பட, பல களங்களை கண்ட தி.மு.க.,வுக்கு பயமா?ப: களங்களை கண்டு, கழகம் ஒருபோதும் அஞ்சாது. மதவாத களங்களை கழகம் விரும்பாது.கே: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தி.மு.க.,வுடன் இணக்கமாக இருப்பது போல் உள்ளதே?ப: உங்களுக்கு பொறுக்காதே!கே: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு, ஓராண்டு ஆகியும், போலீசார் இதுவரை, ஒருவரை கூட கைது செய்யவில்லையே?ப: சி.பி.ஐ.,க்கு இந்த வழக்கை கொண்டு வர, தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.கே: தமிழக சட்டம் - ஒழுங்கு பற்றி...ப: இந்த ஆட்சியில், 19 மாதத்தில், 896 கொலைகள் நடந்துள்ளன. இதுதான் இன்றைய சட்டம் - ஒழுங்கின் நிலை.கே: அழகிரி மீது, 1,000 கோடி ரூபாய், ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால், அவர் பதவி விலக வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரே?ப: முதலில் அந்தம்மாவை, பெங்களூரு கேஸை முடிக்க சொல்லுங்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.
"அகநானூறு முடிந்து விட்டது"

: பேட்டி துவங்கியதிலிருந்து உற்சாகமாகவும், ஜாலியாக, அவர், விஜயகாந்த் பற்றி, மூன்று முறை பேசினார். தொடர்ந்து, பல கேள்விகளுக்கு, தன் பாணியிலேயே பதிலளித்தார். அப்போது, மூத்த நிருபர் ஒருவர், "உங்கள் இலக்கியப் பணியில், தொல்காப்பியத்துக்கு பின், அகநானூறு எழுதுகிறீர்களா' என, கேட்டதும், அவரை பார்த்து சிரித்துக் கொண்டே, ""அகநானூறு தான் முடிந்து விட்டதே. எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் முடிந்து விட்டது. இனி புறநானூறு தான் எழுத வேண்டும்,'' என்றார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (97)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shiva Kumar - coimbatore,இந்தியா
09-ஏப்-201310:51:10 IST Report Abuse
Shiva Kumar நல்லா சொம்படிங்க உங்களுக்கெல்லாம் மினிஸ்டர் போஸ்ட் ரெடி எரியற கொள்ளில எந்த கொல்லி நல்ல கொள்ளினு கேட்டநா ம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
09-பிப்-201300:04:22 IST Report Abuse
Cheenu Meenu நான் பொதுத்தேர்தல் பற்றிய யூகத்திலும் இல்லை, வியூகத்திலும் இல்லை. என் மகள் கனிமேல் அமர்ந்திருக்கும் இருக்கும் 2 G பூதத்தினை விரட்ட எந்த வியூகம் சரிப்படும் என்று சிந்தித்துக்கொண்டு ...... பேரம் படிய ... முனைந்து கொண்டு இருக்கிறேன். சக்காரியா கமிஷன் பார்முலா வொர்க்அவுட் ஆகுமா ?
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Cancel
Narendra Bharathi - Sydney,ஆஸ்திரேலியா
08-பிப்-201319:46:08 IST Report Abuse
Narendra Bharathi கருணாவின் கொடை வள்ளல் தன்மைக்கு இதோ ஒரு சாம்பிள்... புகழ் பெற்ற தி.மு.க. மேடைப் பேச்சாளர் "தீப்பொறி ஆறுமுகம்", தன் மகளின் திருமணத்திற்காக பொருளாதார உதவி கோரி மு.க வை அவரது இல்லத்தில் சந்திக்க சென்றார். ஆறுமுகத்தைக் கண்டதுமே சற்று முந்திக் கொண்டு, "ஏன்யா, இவ்வளவு வருஷமா நம்ம கட்சியில இருக்கியே, கட்சிக்குன்னு எப்போதாவது பத்து ரூபாய் நன்கொடையா குடுத்து இருக்கியா?" என்றாராம். இதைக் கேட்டவுடன் வந்த காரியத்தை மறந்து, மனமுடைந்து திரும்பினார். பின்னர் ஆறுமுகத்துக்கு கலியுக கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் பொருளுதவி செய்தது வேறு கதை. இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் - அவர்களை கீழ்த்தரமாக ஏசியே "தி.மு.க" வை வளர்த்தவர் தீப்பொறி என்பதை இங்கே மறக்கலாகாது. கருணாவிற்கு சேர்க்கவும்/எடுத்துக் கொள்ளவும்தான் தெரியும். அவர் என்றுமே எச்சிக் கையால் காக்காய் ஓட்ட மாட்டார்...
Rate this:
41 members
0 members
39 members
Share this comment
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
09-பிப்-201300:57:37 IST Report Abuse
Vanavaasamஅதனால் தான் தீவிர தி மு க தொண்டரும் அவரை மறந்தும் 'வள்ளல்' கலைஞர் என்று சொல்வதில்லை .. வாழும் தமிழ் என்று வேண்டுமானால் சொல்வர் ... அதனாலும் பயன் யாருக்கும் இல்லை ......
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
09-பிப்-201301:13:56 IST Report Abuse
Vanavaasamஅதவாது ஒரு 600 வோட்டு தி மு க இழைந்தது ... ஒரு 600 கொலையாளிகள் தி மு க வில் உள்ளனர் ... இதன் மூலம் நாட்டுக்கு விளங்குகிறது ... இவர் முதல்வராக இருந்த போது ..இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க அண்ணாமலை பல்கலை கழகம் முடிவு செய்த போது .. உதயகுமார் எனும் மாணவர் கருப்பு கொடி காட்டி .. பின் தி மு க வினரால் கொலை செய்ய பட்டார்.. அவரின் ஏழை பெற்றோர் உதயகுமார் தன் மகனே இல்லை என்று நீதி மற்றதில் தெரிவித்தனர்...இந்த வாகுமூலதிற்கு பின்னால் ஒரு ஐ பி எஸ் கூட்டமே இயங்கியதாகவும் அவர்கள் பெற்றோரை பார்த்து 'அழுத்தம்' கொடுததாகவும் ஒரு முன்னால் எஸ் பி தெரிவித்தார் ..தி மு கா வின் எந்த ஒரு திருபுமுனைக்கும் பல கொலைகள் என்பது அதன் பாரம்பர்யம் .....
Rate this:
5 members
0 members
4 members
Share this comment
Cancel
NAGARAJAN S - MADURAI,இந்தியா
08-பிப்-201318:04:38 IST Report Abuse
NAGARAJAN S தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மட்டுமா மோசம். இங்கு எல்லாமே சர்வ நாசம் என்பது வாக்களித்த அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் இன்னும் மூனரை ஆண்டுகள் எங்க அம்மாவை அசைக்க முடியாதுல்லே............எப்புடி?
Rate this:
9 members
0 members
38 members
Share this comment
Cancel
Arul - Chennai,இந்தியா
08-பிப்-201317:55:03 IST Report Abuse
Arul ப: "தி.மு.க., எப்போதும், இது போன்ற பெரிய விஷயங்களை, பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டித்தான் முடிவெடுக்கும்." பொதுக்குழு-கருணாநிதி , செயற்குழு-ஸ்டாலின்
Rate this:
39 members
0 members
16 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
08-பிப்-201317:25:55 IST Report Abuse
LAX நிருபர்கள் கேள்விகேட்டு நேரத்தை வீணடித்திருக்க வேண்டாம். ஒருகேள்வி ஒரு பதில் என்றே உள்ளது. சரியான பதில் வராவிட்டால் திரும்ப வேண்டிய பதிலைப் பெற திரும்ப அழுத்தமாக கேள்வியை விளக்கிக் கேட்டிருக்கவேண்டியதுதானே. அப்போதுதான் சூப்பராக பொரிந்து தள்ளும் சம்பவம் அரங்கேறியிருக்கும். சரி சரி விடுங்கள் அவரிடமிருந்துதான் விளக்கமாக அவ்வபோது கேனா பனா அறிக்கை வந்துவிடுமே?
Rate this:
44 members
0 members
8 members
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
08-பிப்-201316:23:10 IST Report Abuse
adithyan இவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்ததே ஒரு கொலையின் மூலம் தான். கட்சிகாரர்கள் எத்தனை கொலை நடத்தினார்கள். ஏ எஸ் ஏ சாமி, தா. கிருட்டிணன், அண்ணா நகர் ரமேஷ், காலம் கடந்த மருந்து விற்பனை மூலம் நடந்த கொலைகள், தற்சமயம் பொட்டு, இன்னும் வெளிவராத கொலைகள் எத்தனை? இதைப்போல பல மடங்கு இருக்கும். ஊழலை பாருங்கள். இவர் அந்த காலத்திலேயே உர ஊழல், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பான் ஊழல், ஆகியவற்றில் பெரும் புகழ் பெற்றிருந்தார். அப்பனுக்கு தவறாமல் பிறந்த மகனாக அழகிரியும் இப்போது உர ஊழல் செய்கிறார். இவரது கலைஞர் டி வி யுடைய அஸ்திவாரமே ஊழலில் கிடைத்த பணம் தானே. மகள் ஊழல் நடத்தி இப்போது அவரது நிறுவன ஊழியர் மீது பழி போடுகிறார். உடல் உழைத்து பெற்ற பணத்திலா அந்த குடும்பம் வாழ்கிறது?
Rate this:
57 members
0 members
18 members
Share this comment
Cancel
Ajay ganesh - kumbakonam ,இந்தியா
08-பிப்-201315:50:49 IST Report Abuse
Ajay ganesh மிகவும் குறைவு இதே என் ஆட்சியாக இருந்தால் என் மகன்கள் இதை நிச்சயம் முறியடித்து இருப்பார்கள். அமாம். இப்படிக்கு மஞ்சள் துண்டு.
Rate this:
42 members
0 members
15 members
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
08-பிப்-201315:20:07 IST Report Abuse
Sundeli Siththar கடந்த, 19 மாத, அ.தி.மு.க., ஆட்சியில், 896 கொலைகள் நடந்துள்ளன இதுதான் இன்றைய சட்டம் - ஒழுங்கின் நிலை.. திருமணத்தில் நல்ல பேச்சு.. இதுதான் பகுத்தறிவா... நல்ல நேரத்தில் நல்லவை பேசவேண்டும் என்பது திராவிட பாரம்பரியம். அதை உணரட்டும் இவர்...
Rate this:
44 members
0 members
24 members
Share this comment
Cancel
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
08-பிப்-201313:43:56 IST Report Abuse
வைகை செல்வன் அ.தி.மு.க., ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள்..இதில் 896 கொலைகளும் தி.மு.க சம்பந்தப்பட்டது.. அப்படித்தானே..??
Rate this:
24 members
0 members
20 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்