கொழும்பு : "இலங்கையில், மனித உரிமை மீறல்கள் நடப்பதால், காமன்வெல்த் மாநாட்டை மற்றொரு நாட்டில் நடத்த வேண்டும்' என, சர்வதேச மனித உரிமை அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில், வரும், நவம்பர் மாதம், காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. முன்னதாக, ஏப்ரல் மாதத்தில், காமன்வெல்த் நாடுகளின் அதிகாரிகள் கூட்டம் நடக்க உள்ளது. இது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், லண்டனில் உள்ள காமன்வெல்த் அமைப்பின் பொது செயலர் கமலேஷ் சர்மாவை, நேற்று முன்தினம், சந்தித்து பேசினார். "இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுடன் நடந்த சண்டையில், போர் குற்றம் புரிந்த வீரர்கள் மீது, அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே, அந்நாட்டின் தலைமை நீதிபதி, கண்டன தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போன்ற மனித உரிமை மீறல் செயல்களை இலங்கை அரசு நிறுத்தாவிட்டால், காமன்வெல்த் மாநாட்டை, வேறு நாட்டில் நடத்த வேண்டும்' என, நியூயார்க்கில் உள்ள சர்வதேச மனித உரிமை அமைப்பு, காமன்வெல்த் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. போர் குற்றவாளிகளை விசாரிக்க தவறியது தொடர்பாக, இலங்கை அரசுக்கு எதிராக, மற்றொரு கண்டன தீர்மானத்தை, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்ய, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடருவதால், காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக, கனடா அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.