சிட்னி : பசிபிக் கடலில் உள்ள, சாலமன் தீவில், சுனாமி தாக்கியதில், ஐந்து கிராமங்கள் அழிந்துள்ளன. தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில், நேற்றுமுன்தினம், 8 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதனால், இந்த தீவில் உள்ள பல பகுதிகள் அதிர்ந்தன. 100க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாயின.இந்த பூகம்பத்தை தொடர்ந்து, சுனாமி ஏற்பட்டது. 5 அடி உயரம் கொண்ட, கடல் அலைகள், தீவுகளை தாக்கின.இந்த பூகம்பத்தினால், சான்டாகுருஸ் தீவில் உள்ள, ஐந்து கிராமங்கள் அழிந்தன. இதுவரை, ஒன்பது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால், ஏராளமான மக்கள் மலை பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.